கருவளையத்தை போக்குவது இவ்வளவு சிம்பிளா…???

Author: Hemalatha Ramkumar
9 April 2023, 6:35 pm

சில சிக்கல்கள் உலகளாவியவை. கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையமும் அப்படி தான். கருவளையம் பல காரணங்களால் ஏற்படுகிறது. பல மணி நேரம் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துதல், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் இதில் அடங்கும். கருவளையங்களை போக்குவது சற்று சவாலான காரியம் தான். எனினும், அது சாத்தியமற்றது அல்ல. ஆனால் சரியான கவனிப்புடன் காலப்போக்கில் அவற்றைக் குணப்படுத்தவும் குறைக்கவும் முடியும். அப்படியான சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் காணலாம்.

●ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு
கிண்ணத்தில் சேர்க்கவும். ஜெல்லை குறைந்தது 2 மணி நேரம் குளிரூட்டவும். இப்போது ஜெல்லை உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் அதை கழுவவும்.

● ஒரு காட்டன் பந்து ஒன்றில் 2 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இப்போது உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் எண்ணெயை காட்டன் பந்து கொண்டு தேய்க்கவும். உங்கள் தோல் தேங்காய் எண்ணெயை உறிஞ்சுவதற்கு 3 மணி நேரம் ஆகும். அதுவரை காத்திருக்கவும். இப்போது, உங்கள் கண்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

● ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் ஆர்கானிக் காபி பவுடரை சேர்க்கவும். பின்னர் தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயில் 2 துளிகள் சேர்க்கவும். நன்றாக கிளறவும். இந்த கலவையை ஒரு காட்டன் பந்தில் முக்கி கண்களுக்குக் கீழே தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர் லேசான க்ளென்சரைப் பயன்படுத்தி கழுவவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!