வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு வறண்ட சருமத்தை பாதுகாக்க உதவும் எளிமையான டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
29 November 2021, 10:48 am
Quick Share

கடுமையான குளிர்கால காலநிலையானது சருமத்தை மந்தமானதாகவும், வறண்டதாகவும் தோற்றமளிக்க செய்யும். எனவே, சருமத்திற்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதும், அதை நீரேற்றமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.

எனவே, குளிர்காலத்தில் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஐந்து இயற்கைப் பொருட்களைப் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்!

ஆர்கன் எண்ணெய்:
ஆர்கான் மரங்களில் ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமாக, தோல், நகங்கள் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது வாய்வழியாகவும் மேற்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை எதிர்த்துப் போராட, ஆர்கான் எண்ணெய், சருமத்தை மென்மையாக்கும் பண்புகள் மற்றும் ஆற்றல் நிரம்பிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன், சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும் ஒரு மந்திர மருந்தாக செயல்படுகிறது.

ஷியா வெண்ணெய்:
ஷியா மரத்தின் கொட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கொழுப்புகளைப் பயன்படுத்தி ஷியா வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது. வறண்ட, குளிர்கால தோலை மென்மையாக்கவும் ஆற்றவும் இது ஒரு அற்புதமான மூலப்பொருளாகும். சருமத்தை ஈரப்பதமாக்குவதைத் தவிர, ஷியா வெண்ணெய் குணப்படுத்தும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது அனைத்து தோல் வகைகளுக்கும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை சரும செல்களை சேதத்திலிருந்து தடுக்கின்றன. இது வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது பல்வேறு தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றாழை:
கற்றாழை இலையில் உள்ள ஜெல் வைட்டமின்கள் A, C, E மற்றும் B12 நிறைந்துள்ளது. குளிர்காலத்தில் தினமும் சருமத்தில் தடவினால், நீண்ட நேரம் ஈரப்பதமாகவும், நீரேற்றமாகவும், மிருதுவாகவும் இருக்கும். இது ஒரு குளிரூட்டும் விளைவை உருவாக்குகிறது. இது சருமத்தை வெயில் அல்லது சொறிகளிலிருந்து பாதுகாக்கிறது.

வைட்டமின் E:
சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் இயற்கையாக ஆதரிக்க, வைட்டமின் E முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் E தோலில் ஏற்படும் புற ஊதா சேதத்தை குறைப்பதில் நன்மை பயக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. வைட்டமின் E எண்ணெய் தடிமனாகவும், தோலில் பரவுவது கடினமாகவும் இருந்தாலும், குளிர்கால நாட்களில் பொதுவாகக் காணப்படும் வறண்ட, திட்டு நிறைந்த தோலுக்கு சிறந்த மாய்ஸ்சரைசராகப் பயன்படுகிறது.

இந்தப் பொருட்கள் அனைத்தும் குளிர்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க சிறந்த தேர்வாக இருந்தாலும், நீரேற்றமாக இருப்பதும் சமமாக முக்கியமானது. உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், முகப்பருக்களை அகற்றவும், சுருக்கங்களை குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக, அழகு உள்ளிருந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

Views: - 198

0

0