எப்பேர்ப்பட்ட முகப்பரு வடுக்களையும் ஒரே வாரத்தில் மறைய வைக்கும் மாயாஜால பொருட்கள்!!!

Author: Hemalatha Ramkumar
11 January 2023, 3:30 pm

முகப்பருக்களை விட அவை விட்டுச்செல்லும் வடுக்கள் மிகவும் மோசமானது. வடுக்கள் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். முகப்பரு அல்லது பருக்களை குறைக்க பல வழிகள் இருந்தாலும், தொல்லைதரும் முகப்பரு வடுக்களில் விடுபடுவது கடினம். முகப்பரு வடுக்களை கையாள போது வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முகப்பரு தழும்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மட்டும் பிரபலமானது அல்ல. ஆனால் அவை முகப்பரு வடுக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், தழும்புகள் மற்றும் அடையாளங்களை தெளிவாக்குகிறது. 5-6 துளிகள் ஃபிரஷான எலுமிச்சை சாற்றை தண்ணீரில் சேர்த்து, ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி, கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் அலோசின் உள்ளது. இது பழைய, பிடிவாதமான முகப்பரு வடுக்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது. தவிர, கற்றாழையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு முகப்பரு மற்றும் பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. இதற்கு சிறிது ஃபிரஷான கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி, இரவு முழுவதும் முகமூடியாகப் பயன்படுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு தினமும் இதனை செய்யவும்.

மஞ்சள்
மஞ்சள் அதன் அற்புதமான நன்மைகளுக்காக பல ஆண்டுகளாக தோல் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமையலறை மூலப்பொருளாகும். மஞ்சளின் சிறந்த பண்புகள் முகப்பருக்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், சருமத்திற்கு அழகான ஆரோக்கியமான பளபளப்பையும் சேர்க்கிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ரோஸ் வாட்டர் அல்லது பச்சை பால் கலந்து பயன்படுத்தவும். இந்த பேஸ்ட்டை தழும்புகள் அல்லது உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சாதாரண நீர் கொண்டு முகத்தை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…