வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து விஷயங்கள்!!!

25 February 2021, 7:22 pm
Quick Share

நமக்கு பிடித்தமான வார இறுதி நாட்களை வீடு சுத்தம் செய்வதற்காக செலவிடுவதை யாரும்  விரும்புவதில்லை. ஆனால் ஒரு அசுத்தமான மற்றும் ஒழுங்கற்ற வீடு நிச்சயமாக நம்மை எரிச்சலூட்டுகிறது. படுக்கையில் அழுக்குத் துணிகளின் குவியலாக இருந்தாலும், அலமாரிகளில் படிந்துள்ள  தூசியாகவோ அல்லது சின்கில் உள்ள அழுக்கு பாத்திரங்களாகவோ  இருக்கலாம். இந்த விஷயங்கள் நம்மை நிச்சயமாக எரிச்சலடைய செய்யும். அமைதியான மற்றும் நிதானமான வார இறுதி நாட்களைக் கழிப்பதற்கான தேவையையும்  சீர்குலைக்கும்.

எனவே, உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு, உங்கள் வீட்டை நிரந்தரமாக சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க சில சிறந்த மற்றும் முறையான வழிகள் உள்ளன. உங்கள் அன்றாட வழக்கத்தில் இந்த எளிதான பழக்கங்களை வளர்ப்பது உங்கள் வீட்டை ஒழுங்காக வைத்திருக்கவும் கடைசி நிமிட குழப்பமான சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும் உதவும்.

1. தினமும் தூசி தட்டுங்கள்:

தூசி இருந்தாலே சளி மற்றும் இருமல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வொரு பத்து நாட்களுக்கு ஒரு முறை தூசி தட்டுவதற்குப் பதிலாக, தினமும் தூசுபடுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யுங்கள்:

பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.  குழப்பமான வீட்டை ஒரே நேரத்தில் சுத்தம் செய்வதை விட ஒரு சில விஷயங்களை ஒழுங்காக வைப்பது நிச்சயமாக எளிதானது.

3. உங்கள் படுக்கையை தயார் செய்யுங்கள்:

எழுந்தபின் ஒவ்வொரு நாளும் உங்கள் படுக்கையை சரியாக்குவது உங்கள் அறையை ஒழுங்கமைக்க வைப்பது மட்டுமல்லாமல், ஒரு சோர்வான நாளுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வருவதையும், அதில் நிம்மதியாக படுத்து உறங்குவதையும் நாம் எதிர்நோக்கலாம்.

4. வீடு சுத்தம் செய்யும் பணியில் அனைவரையும் சேர்க்கவும்:

வீட்டை ஒழுங்காக வைத்திருப்பது ஒரே ஒருவரின் வேலை மட்டும் அல்ல. உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் அறையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க ஈடுபடுங்கள்.

5. ஒரு அட்டவணையை உருவாக்கவும்:

சலவை செய்வது அல்லது பாத்திரங்களை கழுவுவது எதுவாக இருந்தாலும், இந்த பணிகளைத் தவிர்ப்பதற்கு ஒரு அட்டவணையைப் பின்பற்றி தினமும் சரியான நேரத்தில் செய்யுங்கள்.

Views: - 10

0

0