இந்த மூன்று விஷயங்கள் போதும்… உடல் எடையை குறைப்பது சுலபமான காரியம் ஆகி விடும்!!!

Author: Hemalatha Ramkumar
25 November 2021, 10:23 am
Quick Share

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல புதிய உணவு முறைகளை பின்பற்றி கடுமையான டையட்டை பின்பற்றுவார்கள். இது எவ்வளவு கடுமையானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் உடல் எடையை குறைப்பது ஒரு போராக இருக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் உடல் எடையை குறைக்கும் செயல்பாட்டில், ஒருவர் தங்கள் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யக்கூடாது.

உங்கள் உணவை மாற்றும்போதும், எப்போதாவது அதிக சுத்தமான உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்துவது உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வியத்தகு முறையில் எதையும் செய்யாமல், நீங்கள் விரும்பிய எடையைப் பெறுவதற்கான மூன்று ஸ்மார்ட் வழிகள் இங்கே உள்ளது.

சாப்பிடுவதில் சமரசம் செய்யாமல் ஒருவர் தங்கள் உணவில் ‘கலோரி பற்றாக்குறையை’ புத்திசாலித்தனமாக உருவாக்க முடியும். கலோரி பற்றாக்குறை என்பது, தற்போதைய உடல் எடையை பராமரிக்க தேவையான கலோரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ​​ஒருவர் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையில் உள்ள பற்றாக்குறையாகும்.

உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைக்க சில உறுதியான வழிகள் இங்கே:

எடை பயிற்சி:
இந்த செயல்முறை உங்கள் தசையை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

இடைப்பட்ட விரதம் (Intermittent fasting):
இடைப்பட்ட விரதம் என்பது ஆரோக்கியமான உணவை சாப்பிட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விரதத்தை உள்ளடக்கியது. உணவை ஜீரணிக்கவும், அதிகப்படியான உடல் கொழுப்பை எரிக்கவும், நச்சு நீக்கவும் உடலுக்கு நேரம் கொடுப்பதே இந்த விரதத்தின் அடிப்படைக் கொள்கை. இது உடலின் கடிகாரத்துடன் மிகவும் இணக்கமாக கருதப்படுகிறது.

ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதம்:
உங்கள் உணவில் அதிக புரோட்டீன்களை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் நீங்கள் நீண்ட நேரம் முழுமையுடனும் திருப்தியுடனும் இருப்பீர்கள்.

Views: - 152

0

0

Leave a Reply