எப்பேர்ப்பட்ட முடி உதிர்வையும் சமாளிக்க வீட்டிலே செய்யலாம் செம்பருத்தி ஹேர் ஆயில்!!!

Author: Hemalatha Ramkumar
5 December 2022, 9:50 am

இன்று பலர் சந்திக்கும் பிரச்சினையில் முடி உதிர்வு என்பது கண்டிப்பாக உள்ளது. பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஏராளமான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் உங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்தி, பளபளப்பான, அடர்த்தியான தலைமுடியைப் பெற உதவும் ஒரு ஹேர் ஆயில் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை:
செம்பருத்தி பூக்கள்- 1/2 கப்
செம்பருத்தி இலைகள்- 2
தேங்காய் எண்ணெய்- 1/4 கப்
பாதாம் எண்ணெய்- 1/4 கப்

செய்முறை:
*முதலில் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலையை சாதாரண நீரில் கழுவி கொள்ளலாம்.

*பின்னர் இவற்றை நிழல் பகுதியில் வைத்து உலர்த்தவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும் அதில் நாம் வெயிலில் உலர்த்திய செம்பருத்தி பூக்கள் மற்றும் இலையை சேர்க்கவும்.

*குறைந்த தீயில் தான் இந்த எண்ணெயை சூடாக்க வேண்டும்.

*ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

*தலைமுடி உதிர்வுக்கான ஹேர் ஆயில் இப்போது தயார்.

*இந்த எண்ணெயை மயிர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவவும்.

*சிறந்த முடிவுகளைப் பெற எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி அதனை தடவுங்கள்.

*தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!