நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முடி வளர்ச்சியை தூண்டும் ஹெர்பல் எண்ணெய்!!!

17 April 2021, 3:15 pm
Quick Share

தலைமுடியை சாஃப்டாக வைப்பதைத் தவிர, முடி உதிர்தலைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் வைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடியில் இழந்த லிப்பிட்களை மாற்றுகின்றன. இது பிளவு முனைகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாகும். எண்ணெய் தடவுவது  முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

தேங்காய் எண்ணெய் முதல் செம்பருத்தி  மலர்கள் மற்றும் ஆமணக்கு எண்ணெய் வரை ஒருவர் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான எண்ணெய்கள் உள்ளன. ஆனால் கடைகளில்  எண்ணெய்களை வாங்குவதற்கு பதிலாக, நீங்கள் சில ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி தூய தேங்காய் எண்ணெயில் கலந்து, அனைத்து நன்மைகளையும் கொண்ட ஹெர்பல் எண்ணெயை வீட்டிலே செய்யலாம்.

மிகவும் எளிதான, ஆரோக்கியமான ஹேக்குகளை பயன்படுத்தி ஒருவர் எப்படி மூலிகை எண்ணெயை வீட்டில் செய்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

20 – செம்பருத்தி மலர்கள் 

30 – வேப்ப இலைகள்

30 – கறிவேப்பிலை

5 – சின்ன வெங்காயம்

1 தேக்கரண்டி – வெந்தயம்

1 – கற்றாழை இலை

15-20 – மல்லிகைப் பூக்கள்

1 கீற்று – தேங்காய் எண்ணெய்

செயல்முறை:

* முதலில் வெந்தய விதைகளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

* கற்றாழை மடலை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

* அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.

* அரைத்த கலவையை தூய்மையான தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலக்கவும்.

* எண்ணெய் பச்சை நிறமாக மாறும் வரை இதனை சுமார் 45 நிமிடங்கள் அடுப்பில் வைத்து குறைந்த தீயில் சூடாக்கவும்.

* பிறகு இதை குளிர்விக்க அனுமதிக்கவும்

* ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி சேமிக்கவும்.

நன்மைகள்:

* செம்பருத்தி மலர்கள், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் தலைமுடி வளர்ச்சியில் நிறைய உதவுகிறது.

* வேப்ப இலைகள் பொடுகு மற்றும் பேன்களைத் தடுக்கின்றன. 

* கற்றாழை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. 

* வெந்தயம் ஆரோக்கியமான கூந்தலுக்கான நன்மைகளை தருகிறது.

* மல்லிகைப் பூக்கள் எண்ணெய்க்கு நறுமணத்தைக் கொடுக்கும். 

இந்த அனைத்து நன்மைகளையும் பெற வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெயைப் பயன்படுத்துங்கள். 

Views: - 84

2

0