தெளிவான அழகான சருமத்தை பெற நீங்கள் ஃபாலோ பண்ண வேண்டிய ஐந்து விஷயங்கள்!!!

19 January 2021, 7:22 pm
Quick Share

சருமத்தை நம் உடல்  ஆரோக்கியத்தைப் போலவே கவனித்துக்கொள்வது அவசியம். வீட்டில் இருந்து செய்யக்கூடிய சில எளிய தோல் பராமரிப்புத் தீர்மானங்கள் உள்ளன. இரசாயனம் கலந்த செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துவதால் பல பக்க விளைவுகள் ஏற்படும். எனவே முடிந்த வரை அதனை தவிர்ப்பது நல்லது. இப்போது தெளிவான சருமத்தை பெறுவதற்கு ஐந்து முக்கிய பராமரிப்பு குறிப்புகளை பார்க்கலாம்.  

1. முகத்தை கழுவ மறக்க வேண்டாம்:

நீங்கள் மேக்அப் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், முகப்பரு உண்டாகிறதா  என்பதைப் பொருட்படுத்தாமல், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு முகத்தை கழுவுவது முக்கியம். ஏனென்றால், நீங்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது பகலில் வெளியே சென்று வந்தாலோ, உங்கள் முகம் அழுக்கு மற்றும் தூசுகளை  சேகரிக்கும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் முகத்தை கழுவுதல், துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் சருமத்தை எளிதாக சுவாசிக்க அனுமதிக்கிறது. பருவத்தைப் பொருட்படுத்தாமல் ஆண்டு முழுவதும் இதைப் பின்பற்ற வேண்டும். 

2. மாய்ஸரைசர் பயன்படுத்த மறக்க வேண்டாம்:

மாய்ஸரைசர் நம்  சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. பொதுவாக  சருமத்திற்கு தண்ணீர் தேவை. மாய்ஸரைசர் உண்மையில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இழுத்து சருமத்திற்கு  கொண்டு வர உதவுகின்றன. ஹைலூரோனிக் அமிலம் போன்ற பொருட்களின் உதவியுடன் தோல் செல்கள் இந்த புதிய ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவை உதவும்.  

3. இறந்த செல்களை தவறாமல் வெளியேற்றவும்:  

வறண்ட சருமம் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக இதனை செய்ய வேண்டும். இருப்பினும், ஒருபோதும் அதிகமாக இதனை செய்ய வேண்டாம். ஏனெனில் இது சிவத்தல் மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். 

4. உங்கள் தொலைபேசி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: 

நம் தொலைபேசியை சுத்தமாக வைப்பதில் நாம்  கவனம் செலுத்துவதில்லை.  ஒவ்வொரு முறையும் தொலைபேசியின் மூலம் பேசும்போது அது சருமத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது உங்கள் தொலைபேசியை சரியான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது. உங்கள் தொலைபேசியைத் துடைக்க 40% ஆல்கஹால் கரைசலுடன் நீர் சார்ந்த சுத்தப்படுத்தியைப் பயன்படுத்துங்கள். 

5. பருத்தி முகமூடிகளை பயன்படுத்துங்கள்: 

காட்டன் ஃபேஸ் மாஸ்கில் முதலீடு செய்வது உங்கள் சருமத்தை சுவாசிக்க உதவும். முகமூடிகளுக்கு உணர்திறன் உடைய தோல் உடையவர்களுக்கு பருத்தி போன்ற சுவாசிக்கக்கூடிய துணி சிறந்தது. 

Views: - 5

0

0