உடைந்து போன உங்கள் லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த ஒரு அசத்தலான ஐடியா உள்ளது!!!

4 September 2020, 1:30 pm
Quick Share

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் பிடித்தமான அடிக்கடி பயன்படுத்தக்கூடிய  உதட்டுச்சாயம் என்பது ஒன்று இருக்கும். ஆனால், சில நேரங்களில் உதட்டுச்சாயங்கள் உடைந்து போய்விடுகின்றன. குறிப்பாக அவை நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத போது இது நேரிடும். இதனால் நம் மனமானது புண்பட்டு போய்விடுகிறது.  ஆனால் உதட்டுச்சாயம் பழுதுபார்க்க முடியாததா? நிச்சயமாக இல்லை. நீங்கள் அந்த குச்சியை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்தலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை இங்கே காணலாம். 

லிப்ஸ்டிக்கை தவறி கீழே போட்டு விடுவது அல்லது நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், லிப்ஸ்டிக்கின் மூடியானது உள்ளே வரும்போது உதட்டுச்சாயங்கள் உடைந்து விடும். நீங்கள் கவனமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதட்டுச்சாயத்தை புதுப்பிக்க, கொஞ்சம் ஷியா வெண்ணெய், மைக்ரோவேவ் ஓவனில் வைக்க கூடிய ஒரு  கிண்ணம், உதட்டுச்சாயம் மற்றும் ஒரு பாட்டில்  ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

* உதட்டுச்சாயத்தை முழுவதுமாக வெளியேற்றி கிண்ணத்தில் வைக்கவும்.

* அடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி ஷியா வெண்ணெய் சேர்க்கவும், அல்லது உங்களிடம் அது வீட்டில் இல்லையென்றால், அதன் இடத்தில் கோகோ வெண்ணையும் பயன்படுத்தலாம்.

* அவற்றை ஒன்றாக கலந்து 10-12 விநாடிகளுக்கு மைக்ரோவேவ் ஓவனில் சூடாக்கவும்.  

* இது முடிந்ததும், நீங்கள் ஒரு காட்டன் துணியைப் பயன்படுத்தி கிண்ணத்தை வெளியே எடுத்து உள்ளடக்கங்களை மீண்டும் கிளற வேண்டும். அதில்  முற்றிலும் கட்டிகள் அல்லது திடமான துண்டுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* அறை வெப்பநிலையில் அது குளிர்ந்து போக செய்யுங்கள். அது தானாகவே கெட்டியாகி வருவதை  நீங்கள் கவனிப்பீர்கள்.

* இப்போது நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் புதிய பாட்டிலுக்குள் இதனை  சேமிக்கவும் அல்லது பழைய, சுத்தமான வெற்று லிப் பாம் குச்சியையும் பயன்படுத்தலாம்.

* அதை சில மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

* உங்கள் புதுப்பிக்கப்பட்ட உதட்டுச்சாயம் பயன்படுத்த தயாராக உள்ளது.  அனைத்தையும் ஒன்றாக கலந்து முற்றிலும் புதிய நிறத்தை உருவாக்க வெவ்வேறு லிப்ஸ்டிக்குகளை கூட  நீங்கள் பயன்படுத்தலாம்.

Views: - 8

0

0