ஒரே வாரத்தில் உங்களுக்கு இருக்கும் நரைமுடியை கருமையாக்க உதவும் வீட்டு வைத்தியம்!!!

13 April 2021, 12:56 pm
Quick Share

நம் செல்கள் மெலனின் உற்பத்தி செய்வதை நிறுத்தும்போது தலைமுடியானது  நரைக்கும். ஒருவரின்  தலைமுடியானது முப்பது வயதிற்கு முன்பாகவே நரைக்க ஆரம்பித்தால், அது முன்கூட்டியே நரைப்பதாக கருதப்படுகிறது. இந்த ஆரம்ப கால நரை முடி  ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில மன அழுத்தம் மற்றும் மரபியல் ஆகியவை அடங்கும். இதனை எதிர்கொள்ள சில எளிய வீட்டு வைத்தியங்களை இப்போது பார்ப்போம். 

● நெல்லிக்காய் தூள்: 

இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல என்றாலும், நெல்லிக்காய் நரைக்கும் செயல்முறையை மெதுவாக்குவதாகவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சிறிது நெல்லிக்காய் தூள் கலந்து இரவில் தடவவும். உங்கள் தலைமுடி இதன்  அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்து கொள்ளும். எனவே முடியை  ஊறவைத்து காலையில் கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்யுங்கள்.

● பிரிங்ராஜ்:

இது ஒரு பிரபலமான ஆயுர்வேத தேர்வு.  இதிலிருந்து எடுக்கப்படும்  கருப்பு சாயத்தை சூடான எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு, தலைமுடியை  கழுவுவதற்கு முன் ஒரு மணி நேரம் இதை விட்டு விடுங்கள்.

● வெங்காய சாறு:

வெங்காய சாறு முடியை மென்மையாக மாற்றுவதற்காக அறியப்பட்டாலும், இது முடியின் தரத்தை கடுமையாக மேம்படுத்துகிறது மற்றும் வயதான செயல்முறையை குறைக்கிறது. எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் சிறிது வெங்காய சாறு கலந்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது காலப்போக்கில் உங்கள் தலைமுடியை கருமையாக்குவது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உங்கள் மந்தமான மற்றும் வறண்ட கூந்தலுக்கு ஏகப்பட்ட அழகை சேர்க்கும். 

Views: - 22

0

0