வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான, நீண்ட கூந்தலை பெறுவது எப்படி…???

30 April 2021, 9:20 pm
Quick Share

உங்கள் தலைமுடியை அழகாகவும், வலிமையாகவும் வைக்க அதற்கு வழக்கமான கவனிப்பு அவசியம். உண்மையில், தலைமுடியானது சுற்றுச்சூழலில் இருந்து அழுக்கு மற்றும் மாசுபடுத்திகளை ஈர்க்கிறது. இவை உச்சந்தலையில் குடியேறி பல முடி பிரச்சினைகளை ஏற்படுத்தும். உங்கள் வீட்டிலும், சமையலறை அலமாரியிலும் முடி பராமரிப்புக்கு மிகவும் சக்திவாய்ந்த இயற்கை பொருட்கள் உள்ளன. ஏனவே உங்களுக்கு உதவ  ஒரு சில முடி பராமரிப்பு ரகசியங்களை இங்கு காணலாம்.

◆ பூண்டு:

ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் ஒரு பொதுவான பொருள் பூண்டு. இது கூந்தலுக்கு நன்மை பயக்கும் என்றும் உண்மையில் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது. முடி வளர்ச்சியை தூண்டும் மற்றும் முடியை வலுப்படுத்தும் அறியப்பட்ட செலினியம் மற்றும் கந்தகத்தை பூண்டு கொண்டிருப்பதால் பூண்டு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது. செலினியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது. இது முடியை வளர்க்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பூண்டில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பூண்டு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களுடன் போராடுகிறது. உண்மையில், இது உச்சந்தலையின் துளைகளை சுத்தப்படுத்தவும்  உதவுகிறது. இதனால் முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும் உச்சந்தலையை ஆற்றவும் செய்கிறது.  

வீட்டிலே பூண்டு முடி எண்ணெயை உருவாக்குவது எப்படி? 

நீங்கள் வீட்டில் முடி எண்ணெயை ஈசியாக  தயாரிக்கலாம். இது பூண்டுடன் உட்செலுத்தப்படுகிறது. பூண்டு பற்களை சிறிய துண்டுகளாக நறுக்கி தூய்மையான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் சேர்க்கலாம். இதனை ஒரு பாட்டிலில் வைத்து ஏழு முதல் பத்து நாட்கள் குளுமையான மற்றும்  உலர்ந்த இடத்தில் வைக்கவும். அல்லது, நறுக்கிய பூண்டை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலக்கலாம். உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த  எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். 

◆ சூடான எண்ணெய் சிகிச்சை உதவுகிறது:

முடி வளர்ச்சிக்கு சூடான எண்ணெய் சிகிச்சையும் முக்கியம். லேசான மசாஜ் மூலம் எண்ணெயைப் பயன்படுத்துவது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.  உங்கள் விரல் நுனிகளைப் பயன்படுத்தி, சிறிய வட்ட  இயக்கங்களில் உச்சந்தலையை மசாஜ் செய்யவும். தூய்மையான  தேங்காய் எண்ணெயை சூடாக்கி, தலைமுடியில் தடவவும். பின்னர், சூடான நீரில் ஒரு காட்டன் துண்டை நனைத்து, தண்ணீரை பிழிந்து எடுக்கவும். தலைப்பாகை போல சூடான துண்டை தலையில் சுற்றவும். இதை 5 நிமிடங்கள் வைத்திருங்கள். இதனை 3 அல்லது 4 முறை செய்யவும். இது முடி மற்றும் உச்சந்தலையில் எண்ணெயை நன்றாக உறிஞ்ச உதவுகிறது.

◆ பொடுகு மற்றும் அரிப்புகளை அகற்ற வேப்பிலை பயன்படுத்துங்கள்:

தலை பொடுகு மற்றும் உச்சந்தலையில் அரிப்புக்கு, வேப்ப இலைகளை தண்ணீரில் ஊற வைத்து, ஒரே இரவில் குளிர விடவும். அடுத்த நாள், வேப்ப இலைகளை ஒரு பேஸ்டாக செய்து தலைமுடியில் ஒரு பேக் போல தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு வெறும் நீரில் முடியைக் கழுவவும்.

◆ முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய்:

தேங்காய் பால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது. இரவில் தலைமுடியில் தேங்காய் பால் தடவலாம். இதனை ஒரு இரவு முழுவதும்  விட்டுவிட்டு மறுநாள் காலையில் தலைமுடியை  கழுவ வேண்டும். தேங்காய் பால் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உலர்ந்த முடியை மென்மையாக்குகிறது.

◆ முட்டைகளைப் பயன்படுத்துங்கள்: 

ஒரு முட்டையை 2 தேக்கரண்டி எள் விதை எண்ணெயுடன் அடிக்கவும். தலைமுடியில் தடவி மீண்டும் 10 நிமிடங்கள் சூடான துண்டை போர்த்தி வைக்கவும். முட்டைகளில் பயோட்டின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஆகும். அவற்றில் புரதமும் இருப்பதால் கூந்தலுக்கு கூடுதல் நன்மை சேர்க்கிறது.

◆ வெங்காயம் தலைமுடிக்கு மிகச் சிறந்தவை:

வெங்காயத்தில் கந்தகம் இருப்பதால், உச்சந்தலையில் பயன்படுத்தப்படும் வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

◆ கறிவேப்பிலை இலைகள்: 

தென்னிந்தியாவில், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலை பேஸ்டை தயிரில் சேர்த்து  கூந்தலுக்கு ஒரு பேக்காக பயன்படுத்தப்படலாம். அல்லது, கற்றாழை ஜெல்லுடன் கலந்து, பின்னர் தலைமுடியில் தடவவும். இது முடி அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். ஃபிரஷான  கறிவேப்பிலையில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் கருப்பாக மாறும் வரை  இதை கொதிக்க வைக்க வேண்டும். கலவையை குளிர்வித்து, பின்னர் உச்சந்தலையில் இந்த எண்ணெயை தடவவும். ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் தலைமுடியைக் கழுவவும்.

Views: - 129

0

0

Leave a Reply