கரும்புள்ளிகள் உங்கள் அழகை கெடுக்கின்றனவா… கவலைய விடுங்க…உங்களுக்கான தீர்வு இங்க இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
3 October 2021, 10:30 am
Quick Share

முகப்பரு மற்றும் பருக்கள் பெரும்பாலும் கரும்புள்ளிகளை விட்டு விடுகின்றன. இவை ஒரு பொதுவான தோல் பிரச்சனையாகும். இதற்கு பலர் பயனுள்ள தீர்வை தேடுகிறார்கள். உங்கள் சமையலறையில் உள்ள பல பொருட்கள் சரும பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும். மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்கள் முதல் தக்காளி போன்ற காய்கறிகள் வரை சரும பிரச்சனைகளில் இருந்து விடைபெற உங்கள் தோலில் பயன்படுத்தலாம்.

இதேபோல், உருளைக்கிழங்கு சாற்றை உங்கள் சருமத்திற்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு பெரும்பாலான இந்திய சமையலறையில் இருக்கும் ஒரு உணவுப்பொருள். ஏனெனில் இது பொதுவாக பல்வேறு சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உருளைக்கிழங்கு சாறு கருமையான புள்ளிகள் மற்றும் பல தோல் பிரச்சினைகளை திறம்பட எதிர்த்துப் போராட உதவும்.

கரும்புள்ளிகளைக் குறைக்க உருளைக்கிழங்கு ஜூஸைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகளை இந்த பதிவில் அறியலாம். இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற நீங்கள் ஃபிரஷான உருளைக்கிழங்கு சாற்றை எடுக்க வேண்டும்.

1. உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு சிறந்த வைட்டமின்களில் ஒன்றாகும். நீங்கள் உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலக்கலாம். இந்த கலவையை ஒரு பருத்தி பஞ்சு உதவியுடன் உங்கள் முகத்தில் தடவவும். இதை சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் வழக்கம் போல் முகத்தை கழுவவும். நீங்கள் இதை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் செய்யலாம்.

2. உருளைக்கிழங்கு சாறு ஃபேஸ் பேக்:
முல்தானி மிட்டி உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்கிறது. இதனை உருளைக்கிழங்கு சாறு கலந்து ஒரு அடர்த்தியான பேஸ்டாக மாற்றி முகத்தில் தடவலாம். பின்னர் நன்கு உலர வைக்கவும். உங்கள் முகம் முற்றிலும் காய்ந்தவுடன் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

நீங்கள் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உருளைக்கிழங்கு சாற்றையும் கலக்கலாம். இந்த சாற்றை உங்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர், உங்கள் முகத்தை நன்றாகக் கழுவவும். நீங்கள் இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்யலாம்.

3. உருளைக்கிழங்கு சாறு டோனர்:
நீங்கள் உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்தி ஒரு டோனரை தயார் செய்யலாம். ஒரு நடுத்தர உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். இந்த இரண்டையும் கலந்து இந்த கலவையை உங்கள் தோலில் தடவவும். நீங்கள் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கலாம் அல்லது காட்டன் பேட்டை பயன்படுத்தி தடவலாம். இதை அதிக நேரம் சேமித்து வைக்க வேண்டாம்.

Views: - 615

0

0