அடுப்புகரி வச்சு ஃபேஸ் மாஸ்கா… இதோட ரிசல்ட் சொன்னா நம்ப மாட்டீங்க… நீங்களே யூஸ் பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
25 September 2024, 1:53 pm

தினமும் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது மாசுபாடு மற்றும் சூரிய ஒளியின் காரணமாக நமது சருமத்திற்கு சேதம் ஏற்படுகிறது. இதனால் நம்முடைய தோலை தினமும் சுத்தம் செய்வது மட்டுமே போதுமானதாக இருக்காது. எனவே உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சார்கோல் ஃபேஸ் மாஸ்க் சிறந்த ஒன்றாக அமையும். வீட்டில் இருந்தபடியே சார்கோல் ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

இது சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, சரும துளைகளில் உள்ள அடைப்புகளை போக்கி, சருமத்திற்கு பொலிவு தருகிறது. எனவே இந்த DIY ஃபேஸ் மாஸ்க்கை எப்படி செய்வது, அதன் பலன்கள் என்ன, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். 

சார்கோல் அல்லது அடுப்புக்கரி ஃபேஸ் மாஸ்க்கின் நன்மைகள் *ஆழமான சுத்தப்படுத்துதல் 

*இறந்த செல்களை அகற்றுதல் 

*சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுதல் *சருமத்தின் பொலிவை மேம்படுத்துதல் 

சார்கோல் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் 

சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் ஏற்றது. இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஆக்டிவேட்டட் சார்கோல் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். 

சார்கோல் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஃபேஸ் மாஸ்க் 

ஒரு டீஸ்பூன் பெண்டோநைட் களிமண், ஒரு டீஸ்பூன் ஆக்டிவேட்டட் சார்கோல் பவுடர், ஒரு டீஸ்பூன் ஆர்கானிக் ஆப்பிள் சைடர் வினிகர், 3 துளி தேயிலை மர எண்ணெய் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். தேவைப்பட்டால் 2-3 துளிகள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

சார்கோல் எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க் 

ஆக்டிவேட்டட் சார்கோல் பவுடர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்டாக குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். 

சார்கோல் ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்துவது எப்படி? 

முதலில் உங்களுடைய முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். பிறகு துண்டு வைத்து முகத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி விடுங்கள். அதன் பிறகு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதற்கு ஒரு பிரஷை எடுத்துக் கொள்ளவும். இந்த ஃபேஸ் மாஸ்கை நீங்கள் முதல் முறையாக பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் அல்லது உங்களுக்கு சென்சிடிவ் சருமம் இருக்கிறது என்றாலோ முதலில் பேட்ச் சோதனை செய்து பார்ப்பது நல்லது. 

இந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் பொழுது உங்களுடைய புருவங்கள், உதடுகள் மற்றும் கண்களை சுற்றி உள்ள பகுதிகளை விட்டு விடவும். மீதமிருக்கக்கூடிய பகுதிகளில் ஃபேஸ் மாஸ்களை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். சார்கோல் மாஸ்க்கை அகற்றிய பிறகு பொறுமையாக உங்களுடைய முகத்தை மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு முகத்தை துடைத்துவிட்டு மாய்சரைசர் பயன்படுத்தவும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!