வெயில் காரணமாக ஏற்படும் சரும எரிச்சலைப் போக்கும் இயற்கை குளியல் பொடி!!!

Author: Hemalatha Ramkumar
18 May 2023, 7:48 pm
Quick Share

Images are copyright to the authorized owners.

Quick Share

கோடை காலம் வந்துவிட்டது, நம் முகத்திற்கு மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, நமது உடலுக்கும் கூடுதல் அக்கறை தேவை! அந்த வகையில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு புத்துணர்ச்சியூட்டும் மூலிகை பொடியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கெமிக்கல் கலந்த சோப்புகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, ஆயுர்வேத குளியல் பொடியை முயற்சித்து பாருங்கள். சந்தனம், துளசி, வேம்பு மற்றும் ரோஜாவின் நன்மைகளைக் கொண்ட இந்த பொடி உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

 • சந்தன பொடி
 • துளசி பொடி
 • வேப்பம்பூ பொடி
 • அதிமதுரம் பொடி
 • மஞ்சள் தூள்
 • ரோஜா இதழ் பொடி
 • பன்னீர்

குளியல் பொடிக்கான செய்முறை:

 1. அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
 2. போதுமான அளவு தயார் செய்து வைத்துவிட்டால், தினமும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
 3. குளிப்பதற்கு முன், 2 முதல் 3 டீஸ்பூன் மூலிகை குளியல் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட்டாக குழைத்துக் கொள்ளவும்.
 4. பேஸ்ட்டை உங்கள் முழு உடலிலும் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வழக்கம் போல நீரில் கழுவவும்.
 5. இதனால் உங்கள் சருமம் நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்கும்.

சந்தனத்தின் குளிர்ச்சியான பண்புகள், வேம்பு, மஞ்சள் மற்றும் துளசி ஆகியவற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன், ரோஜாவின் இனிமையான விளைவும், கோடையில் சூரிய ஒளியினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது. இந்த குளியல் தூள் உங்கள் சருமத்திற்கு போதுமான குளிர்ச்சியை அளிக்கிறது. இது சருமத்தை மென்மையாக்குகிறது, அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது, மேலும் உடலின் முகப்பருவுக்கு உதவுகிறது, நீண்ட காலத்திற்கு உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 55

0

0

Leave a Reply