கொத்து கொத்தா முடி கொட்டுதா… உங்க பிரச்சினைக்கு சொல்யூஷன் கிடைச்சாச்சு!!

Author: Hemalatha Ramkumar
29 May 2023, 10:36 am
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

இப்போது முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சினை ஆகிவிட்டது. இதனை சமாளிக்க கடைகளில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும் பல வீட்டு வைத்தியங்களும் உள்ளன. முடி உதிர்தலுக்கு பக்க விளைவுகள் இல்லாத இயற்கையான பொருட்களே சிறந்தது. இந்த பதிவில் தயிர் ஹேர் மாஸ்க் பயன்படுத்தி முடி உதிர்வை எப்படி சமாளிப்பது என்பதைப் பார்ப்போம்.

தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
தேன் என்பது ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தின் இயற்கையான ஆதாரமாகும். இது முடி உதிர்வைக் குறைக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். தேனை தயிருடன் கலந்து, முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்துவது அதனை ஊட்டமளிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவும். இதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் கலக்கவும். இதனை உச்சந்தலையில் தடவி சுமார் 15 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
தேங்காய் எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உச்சந்தலையில் ஊட்டமளிப்பதற்கும், முடி உதிர்வதைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான முடியை மேம்படுத்துவதற்கும் உதவும். தேங்காய் எண்ணெயுடன் தயிர் கலந்து பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையை போக்கி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் கலக்கவும். இதனை உங்கள் உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தயிர் மற்றும் வெந்தய ஹேர் பேக்
வெந்தயமானது புரதத்தின் இயற்கையான மூலமாகும். இது மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் ஊட்டமளிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். 1 டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை பொடியாக்கி, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து கலக்கவும். இதனை உச்சந்தலையில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 152

0

0