காதில் உள்ள பருக்களை உடனடியாக மறைய செய்ய அசத்தலான வீட்டு வைத்தியம்!!!

22 May 2020, 2:02 pm
how to remove unnecessary pimples on the ears
Quick Share

பருக்கள் என்றாலே பிரச்சனை தான். அது நம் அழகை கெடுப்பதோடு வலியையும் தரக்கூடியது. மேலும் பருக்கள் போன பிறகும் அந்த இடத்தில் இருக்கும் அதற்கான தழும்புகள் பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். பருக்கள் முகம், கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் ஏற்படும். காதிலும் ஒரு சிலருக்கு பருக்கள் உண்டாகும். காதில் உண்டாகும் பருக்களின் உள்ளே சீழ் இருக்காது. 

ஆனால் காதில் பருக்கள் உண்டாக காரணம் என்ன…அதிகமாக சுரக்கப்படும் எண்ணெய், காதில் அழற்சி, இன்ஃபெக்ஷன், தனிநபர் சுகாதாரம் இல்லாமல் இருப்பது, அதிகமான மன அழுத்தம் ஆகிய காரணங்களால் காதில் பருக்கள் தோன்றும். இதனை சரி செய்வதற்கு பல வழிகள் உண்டு. அதற்கான வீட்டு வைத்தியத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

★தேயிலை மர எண்ணெய்:

how to remove unnecessary pimples on the ears

பருக்களை சரி செய்வதில் தேயிலை மர எண்ணெய் சிறந்த பங்கு வகிக்கிறது. ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட இந்த எண்ணெய் வீக்கத்தை குறைத்து பருக்களை மறைய செய்யும். இதற்கு ஒன்பது தேக்கரண்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேயிலை மர எண்ணெயை கலக்குங்கள். ஒரு காட்டன் பாலை கொண்டு இதனை பருக்களின் மேல் தடவி வாருங்கள்.

★ஒத்தடம்:

how to remove unnecessary pimples on the ears

சூடான ஒத்தடம் கொடுக்கும் போது பருவானது அமுங்கி விடுகிறது. இது மட்டும் இல்லாமல் பருக்களினால் ஏற்படும் வீக்கமும், வலியும் குறையும். இதனை செய்வதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து ஒரு காட்டன் பந்தை அதில் முக்கி பருக்கள் மீது 10 – 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள். இதனை ஒரு நாளைக்கு நான்கு முறை செய்ய வேண்டும்.

★கிரீன் டீ:

how to remove unnecessary pimples on the ears

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த கிரீன் டீயில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை உள்ளது. இதன் காரணமாக பருக்களில் உள்ள வீக்கத்தை குறைத்து அவற்றை மறைய செய்யவும் உதவுகிறது. ஒரு கப் சூடான தண்ணீரில் கிரீன் டீ பேக்கை ஒரு நிமிடங்கள் முக்கி வையுங்கள். அந்த பையில் இருக்கும் தண்ணீரை பிழிந்து அதனை பருக்கள் இருக்கும் இடத்தில் பத்து நிமிடங்கள் வையுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரு முறை செய்து வாருங்கள்.

★ஆப்பிள் சிடர் வினிகர்:

how to remove unnecessary pimples on the ears

ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆஸ்ட்ரின்ஜன்ட் தன்மை கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவிலான ஆப்பிள் சிடர் வினிகரில் ஒரு காட்டன் பந்தை முக்கி பருக்கள் மீது தடவி வாருங்கள். இவ்வாறு தினமும் மூன்று முறை செய்து வர வேண்டும்.

★சின்ன வெங்காயம்:

how to remove unnecessary pimples on the ears

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த சின்ன வெங்காயம் வீக்கத்தை குறைப்பதில் வல்லது. இதனை பயன்படுத்தி வரும்போது பருக்கள் மீண்டும் தோன்றுவதை தடுக்கும்.

இரண்டு சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை எடுத்து கொள்ளுங்கள். ஒரு காட்டன் பந்தில் இந்த சாற்றை முக்கி எடுத்து பருக்களின் மேல் பூசி வந்தால் பருக்கள் விரைவில் மறையும்.

Leave a Reply