பத்தே நிமிடத்தில் சருமம் தங்கம் போல மின்ன கிரீன் டீ ஃபேஸ் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
8 April 2023, 5:28 pm

கிரீன் டீ சருமத்திற்கு ஒரு மாயாஜால பொருளாக கருதப்படுகிறது. கிரீன் டீயில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பாலிபினால்கள் அல்லது கேடசின்கள் எனப்படும் செயலில் உள்ள கூறுகள் உள்ளது. அவை எண்ணற்ற தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. முக்கியமாக அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக, கிரீன் டீ பலரால் விரும்பப்படகிறது. கூடுதலாக, கிரீன் டீயில் காஃபின் மற்றும் டானின்கள் உள்ளன. அவை உங்கள் இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

சருமத்திற்கு கிரீன் டீயின் நன்மைகள்:-

  1. தோல் எரிச்சல் மற்றும் சிவத்தலை எதிர்த்து போராடுகிறது
  2. முகப்பருவை குறைக்கிறது
  3. தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது
  4. முன்கூட்டிய வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது
  5. சருமத்தை ஈரப்பதமாக்குகிறது

சிறந்த முடிவுகளுக்கு கிரீன் டீயை எவ்வாறு பயன்படுத்துவது?

*நீங்கள் ஒரு கிரீன் டீ பேக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கிரீன் டீயைக் காய்ச்சி, பையை குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். டிகாஷன் நமக்கு தேவையில்லை, பையில் இருந்து தேயிலை இலைகளை மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். கிரீன் டீ தூளைப் பயன்படுத்தினால், அதில் 2 டேபிள்ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.

*இதனோடு தயிர், தேன் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

*பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்கவும். பேஸ்ட் தடிமனாக இருக்க வேண்டும் மற்றும் தண்ணீராக இருக்கக்கூடாது.

*பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். கண்கள் பகுதியில் தவிர்க்கவும்.

*இதனை 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும், பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?