உங்கள் முடி பிரச்சினை அனைத்திற்கும் செலவில்லா தீர்வு: கறிவேப்பிலை ஹேர் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
24 May 2022, 7:19 pm
Quick Share

உங்களுக்கு முடி கொட்டுகிறதா, உங்கள் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர இந்த கறிவேப்பிலை ஹேர் பேக்கை மற்றும் கறிவேப்பிலை எண்ணெயை பயன்படுத்துங்கள்.

கறிவேப்பிலையை சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், கறிவேப்பிலையை வைத்து நம்முடைய முடியையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சிறிய இலை என்று நினைக்கும் கறிவேப்பிலையில் பல நன்மைகள் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான காரணங்களால் நமக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது. மன அழுத்தம், வைட்டமின் குறைபாடு, உடல் சூடு, என்று பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.

மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலை நாள்தோறும் சமையலில் சேர்க்கப் படுகிறது. கறிவேப்பிலை வேண்டாம் என்று ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.

சுலபமான முறையில் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து இதை நாமே நம் கையால் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், அதிகமாக முடி வளர செய்ய தேவையான சத்துக்கள் அனைத்தும் கருவேப்பிலையில் உள்ளது. அந்த கறிவேப்பிலையை வைத்துதான் கறிவேப்பிலை எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை பேக் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முதலில் கருவேப்பிலை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்:
*முதலில் கருவேப்பிலையை உருவி தண்ணீரில் போட்டு கழுவி ஈரம் இல்லாமல் உலர வைக்க வேண்டும். பின்பு கருவேப்பிலை காய வேண்டும் என்று அவசியம் இல்லை. கருவேப்பிலையில் தண்ணீர் மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தயாராக இருக்கக்கூடிய கருவேப்பிலையிலிருந்து 2 கப் அளவு கருவேப்பிலைகளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு, 2 ஸ்பூன் வெந்தயத்தையும் இந்த கருவேப்பிலைகளோடு போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலைக்கு 400ml அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகுஅடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி மிக்சியில் அரைத்து வைத்திருக்கக் கூடிய கருவேப்பிலை, வெந்தய விழுதை எண்ணெயில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து காய்ச்சவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து பச்சை நிறத்திற்கு வரும்வரை எண்ணெயை காய்ச்ச வேண்டும். பின்பு அடுப்பை நிறுத்தி விட்டு. இந்த கறிவேப்பிலை எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். தினம்தோறும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். தலைக்கு குளிக்கும் போது இந்த எண்ணெயை இளஞ்சூடாக்கி தலைக்கு மசாஜ் செய்து பத்து நிமிடம் ஊற வைத்து பின்பு குளிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு இந்த எண்ணெய்யை தலைமுடியில் தேய்த்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும்.

கறிவேப்பிலை ஹேர் பேக்:
ஒரு மிக்ஸி ஜாரில் 2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 4 மிளகு சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த விழுதோடு புளித்த தயிர் 4 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து தலை முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி வரை இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்துவிட்டு அரைமணி நேரம் கழித்து மைல்டான ஹெர்பல் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம். தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும், நீளமாகவும் வளரும்.

Views: - 1556

0

0