தூக்கி எறியும் வாழைப்பழத் தோலைக் கொண்டு ஒரு மினி பியூட்டி பார்லரே உருவாக்கிடலாம் போலவே!!!

Author: Hemalatha Ramkumar
14 October 2021, 10:40 am
Quick Share

நம்மில் பெரும்பாலானோர் வாழைப்பழத் தோலை குப்பையில் வீசிவிடுகிறோம். ஆனால் வாழைப்பழத் தோலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் பல சரும நிலைகளை குணமாக்கும் என்பது பலருக்கும் தெரியாது. வாழைப்பழத் தோல் எப்படி நம் சருமத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வாழைப்பழத் தோலின் நன்மை:
பழத்தைப் போலவே, வாழைப்பழத் தோலிலும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல பண்புகள் உள்ளன. வாழைப்பழத் தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு சூரியன் சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பு போன்ற பல நன்மைகளை அளிக்கும். அதுமட்டுமல்ல, இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, எரிச்சலைத் தணிக்கிறது மற்றும் மென்மையான மெல்லிய கோடுகளை போக்கக் கூடியது. இது எக்ஸிமா மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாகும். கூடுதலாக, இது பொட்டாசியம் மற்றும் ஈரப்பதத்தால் நிறைந்துள்ளது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக மாற்ற உதவுகிறது. இது வைட்டமின் A, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வாழைப்பழத் தோலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான 4 வழிகள்:
1. வாழைப்பழத் தோலை தேய்த்தல்:
சருமத்திற்கு வாழைப்பழத் தோலைப் பயன்படுத்துவதற்கான எளிய வழி இது. இந்த வழியில் இது சுருக்கங்களை குறைக்க உதவுகிறது, சருமத்தில் வீக்கம், வறட்சி, மற்றும் எதிர்கால வெடிப்புகளை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை:
படி 1: முதலில் உங்கள் முகத்தை ஒரு க்ளென்சரால் நன்றாக கழுவி, ஒரு டவலால் உலர வைக்கவும்.

படி 2: ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து, அதை உங்கள் முகத்தில் வைத்து மசாஜ் செய்யத் தொடங்குங்கள்.

படி 3: 10 நிமிடங்களுக்கு இந்த செயல்முறை தொடரவும் மற்றும் தோல் பழுப்பு நிறமாக இருந்தால், அதை புதிய தோல் கொண்டு மாற்றவும்.

படி 4: இப்போது, ​​10 நிமிட மசாஜ் செய்த பிறகு, மற்றொரு 10 நிமிடங்கள் காத்திருக்கவும்.

படி 5: பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

2. வாழைப்பழத் தோல் மாஸ்க்:
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் சத்தானது. ஆனால் சருமத்திற்கு வரும் போது, ​​வாழைப்பழத்தில் வைட்டமின் B6, B12, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் துத்தநாகம் போன்ற சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் பல தோல் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.

பயன்படுத்தும் முறை:
படி 1: அரை வாழைப்பழத்தை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி, முழு தோலையும் அதே போல் நறுக்கி கொள்ளவும்.

படி 2: இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

படி 3: ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் சேர்க்கவும். கலவையை நன்கு கிளறவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கில் சிறிது ரோஸ்வாட்டரை சேர்த்து பேஸ்ட்டாக மாற்றலாம்.

படி 4: இந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.

படி 5: சில நிமிடங்கள் உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

3. வாழைப்பழத் தோல் ஸ்க்ரப்:
சரும ஆரோக்கியத்தை பராமரிக்க ஸ்க்ரப் மிகவும் முக்கியம். ஏனெனில் இது சருமத்தை உரித்து வறட்சியைத் தடுக்கும். மஞ்சளுடன் வாழைப்பழத் தோல் பயன்படுத்துவது ஒரு சிறந்த பயனுள்ள DIY ஸ்க்ரப்பை உருவாக்குகிறது. ஒருபுறம், வாழைப்பழத் தோலில் புரோட்டீன், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை ஊட்டமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க முடியும். மறுபுறம், மஞ்சள் பழுப்பு நிறத்தைக் குறைக்கவும், முகப்பருவை எதிர்த்துப் போராடவும், கரும்புள்ளிகளை ஒளிரச் செய்யவும், இறந்த சருமத்தை அழிக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:
படி 1: வாழைப்பழத் தோலை மிகச் சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.

படி 2: இப்போது சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இவற்றை நன்றாக கலக்கவும்.

படி 3: அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

படி 4: பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளலாம்.

Views: - 283

0

0