இயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை மறையச் செய்யும் எளிமையான வழிகள்!!!

Author: Hemalatha Ramkumar
28 March 2023, 10:13 am
Quick Share

Images are © copyright to the authorised owners.

Quick Share

சுருக்கங்கள் என்பது நமது தோலில் உருவாகும் கோடுகள் மற்றும் மடிப்புகளாகும். அவை நம் கண்கள், நெற்றி, வாய் மற்றும் கழுத்தைச் சுற்றி குறிப்பாக கவனிக்கப்படுகின்றன. பொதுவாக, சுருக்கங்கள் என்பது வயதாகும் செயல்முறையின் இயற்கையான ஒரு அறிகுறியாகும். வயதாக ஆக சருமம் இயற்கையாகவே அதன் மீள் தன்மையை இழக்கிறது. மேலும் இயற்கை எண்ணெய்களின் உற்பத்தி குறைவதால் சுருக்கங்கள் உருவாகிறது.

வயதாவதைத் தவிர, புகைபிடித்தல் மற்றும் புற ஊதா ஒளியை நீண்ட நேரம் வெளிப்படுத்துவதால் சுருக்கங்கள் ஏற்படலாம். புகைபிடித்தல் நமது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை பாதிக்கிறது, இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் புரதமாகும். சருமத்தை சரியாக ஈரப்பதமாக்குவது, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிக்காமல் இருப்பது மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலம் முன்கூட்டிய சுருக்கங்களை தடுக்கலாம். சுருக்கங்களை குறைக்க உதவும் சில வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க் – தேங்காய் எண்ணெயை இரவில் தடவி காலையில் சுத்தம் செய்யும் போது, சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, அதே நேரத்தில் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை ஒரு பெரிய அளவிற்கு மீட்டெடுக்கிறது.

கற்றாழை- கற்றாழையை மேற்பூச்சுப் பொருளாக சருமத்தில் பூசும்போது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இது ஏராளமான சரும நன்மைகளைக் கொண்டுள்ளது.

வாழைப்பழ மாஸ்க்- வாழைப்பழம் ஒரு சூப்பர்ஃப்ரூட். வாழைப்பழம் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பல முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். வாழைப்பழ ஃபேஸ் பேக்கில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் சருமத்தை வளப்படுத்துகிறது. இது சருமத்தின் நீரேற்றத்தை அதிகரிக்கிறது.

தயிர், தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் – தயிர், தேன் மற்றும் எலுமிச்சை முகமூடி ஒரு அற்புதமான ஃபேஷியல் ஆகும். இது இறந்த செல்களை நீக்குகிறது, சருமத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது, சருமத்தை பொலிவாக்குகிறது, சருமத்தை சரிசெய்யிறது, கறைகளை நீக்குகிறது, சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, மேலும் இறுக்குகிறது. சிறந்த முடிவுகளுக்கு வாரம் ஒருமுறை இதை பயன்படுத்தவும்.

உங்கள் உணவில் டார்க் சாக்லேட் சேர்க்கவும் – சாக்லேட் சாப்பிடுவது அதிகாரப்பூர்வமாக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. டார்க் சாக்லேட் அல்லது அதிக கொக்கோ சதவிகிதம் கொண்ட சாக்லேட்டுகள் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அதில் ஒன்று நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நமது இரத்த ஓட்டத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது.

அடிக்கடி முக மசாஜ் செய்யுங்கள்- அடிக்கடி முக மசாஜ் செய்யுங்கள் அல்லது 5 முதல் 6 நிமிடங்கள் உங்கள் விரல்களால் தினமும் உங்கள் முகத்தை மசாஜ் செய்யுங்கள். ஏனெனில் இது நமது சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் புரதங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சுருக்கங்களைத் தடுக்கலாம். இது நமது முக தசைகளால் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கிறது. இது சுருக்கங்களுக்கு மற்றொரு காரணமாகும். சுருக்கங்களைக் குறைப்பதைத் தவிர, மசாஜ் செய்வது தோல் தொய்வைத் தடுக்கிறது மற்றும் நமது சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது.

நல்ல தூக்கத்தைப் பெறுங்கள்- ‘பியூட்டி ஸ்லீப்’ பற்றி கேள்விபட்டு இருக்கீங்களா? ஒழுங்கற்ற தூக்க முறைகள், நமது சருமத்தை அழுத்தும் வகையில் தூங்குவது சுருக்கங்கள் உருவாக வழிவகுக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 114

0

0