ஓட்ஸ்-ஐ வைத்து முகத்தை அழகுபடுத்தலாம் வாங்க! 2 சிம்பிள் உங்களுக்காக!

27 March 2020, 10:57 am
oatmeal-face-mask-updatenews360
Quick Share

வெயிலினால்   முகம் டேன் ஆகி  இருக்கும். அதுமட்டுமில்லாமல்   சருமத்தில் தூசுக்கள், கரும் புள்ளிகள்   மற்றும் அழுக்குகள் படிந்து நம் முகத்தின்   அழகையே கெடுத்துவிடும். இவற்றை வீட்டிலிருந்தே சரிசெய்யலாம். ஓட்ஸ் – ஐ   வைத்து முகத்திற்கு பேஸ் பேக் செய்து பயன்படுத்தி பாருங்கள் முகத்தில்   உள்ள கரும் திட்டுகள் மற்றும் டேன் மறைந்து சருமம் பளிச்சென்று இருக்கும். முகத்திற்கு   ஓட்ஸ்-ஐ பயன்படுத்துவது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாருங்கள். 

oatmeal-face-mask-updatenews360

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 3/4 கப்

உலர்ந்த ரோஜா இதழ்கள் – 3/4 கப்

பாதாம் – 8

oatmeal-face-mask-updatenews360

ஓட்ஸ் பேஸ்பேக் செய்முறை:

 • மேலே   குறிப்பிட்ட  அனைத்து பொருட்களையும்  சரியான அளவு எடுத்துக்  கொள்ளுங்கள். பின்பு இதை மிக்சியில்  போட்டு மாவு போல அரைத்துக் கொள்ளுங்கள்.
 • இதை  கண்ணாடி   ஜாரில் சேர்த்து  வைத்துக் கொள்ளவும். இந்த   பொடியை வாரத்திற்கு ஒரு முறை  முகத்திற்கு போட்டு பயன்படுத்தி வரலாம்.  
 • இதில்  2 தேக்கரண்டி  பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். ரோஸ்  வாட்டர் அல்லது தண்ணீருடன் இந்த பொடியை   சேர்த்து பசை போல கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு   இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். ஒரு அரை  மணி நேரம் வரை காத்திருங்கள். 
 • குளிர்ந்த   நீரால் முகத்தை   கழுவிக் கொள்ளலாம்.  இதை தொடர்ந்து ஒரு  மாதம் வரை, வாரத்திற்கு   ஒரு முறை செய்து வந்தால் முகம்  பளிச்சென்று இருக்கும். சருமத்தில்  உள்ள கரும் திட்டுக்கள் மறைந்து விடும். முகத்தில்   இருக்கும் டேன் மறைந்து சருமம் மின்ன செய்யும்.
oatmeal-face-mask-updatenews360

பேஸ்பேக் பயன்கள்:

 • சருமத்திற்கு   போதுமான அளவு   ஊட்டச்சத்துக்கள்   கிடைக்கும்.
 • இயற்கையாகவே   சருமத்திற்கு நிறம்  கொடுக்கும்.
 • சருமத்தில்   உள்ள சோர்வு   நீங்கி, முகம் பிரஷ்- ஆக   இருக்கும்.

ஓட்ஸ்  பேஸ்வாஷ் பவுடர் :

பேஸ்வாஷ்  பவுடர் செய்ய   இது சிம்பிளான வழிமுறையாகும். 

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – அரை கப்

பச்சை பயறு மாவு – அரை கப்

கடலைமாவு – அரை கப்

ஓட்ஸ் பவுடர் – அரை கப்

oatmeal-face-mask-updatenews360

செய்முறை:

 • இந்த நான்கு   பொருட்களையும்   ஒரு பௌலில் போட்டு  கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.  இதை ஒரு கண்ணாடி பாட்டிலில்   சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
 • பின்பு   முகத்தை கழுவும்  நேரங்களில் இந்த பவுடரை   தண்ணீரில் கரைத்து முகத்தில்  போட்டு கழுவ வேண்டும்.
 • இதை   தினமும்   செய்து வந்தால்  முகம் நிறம் மாறும்.  சருமம் இளமையான தோற்றத்தை   உங்களுக்கு கொடுக்கும்.

பேஸ்வாஷ்  பவுடர் பயன்கள்:

 • இந்த   பேஸ் சருமத்திற்கு  நல்ல நிறத்தை கொடுக்கும்.
 • முகத்தில்  உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும்  கரும் திட்டுக்கள் ஆகியவற்றை நீக்கி விடும்.
 • கடலை   மாவு மற்றும்  அரிசி மாவு முகத்திற்கு   கிடைக்கும் இயற்கை நிறமூட்டிகள்   ஆகும்.
 • அதுமட்டுமில்லாமல்  சருமத்தை இளமையாகவும், பளிச்சென்றும்   வைக்க இது உதவுகிறது.
 • சருமத்தை  இளமையாகவும், பொலிவுடனும்   வைத்துக் கொள்ள இந்த பேஸ்வாஷ் பவுடர்   உதவுகிறது.
oatmeal-face-mask-updatenews360