ரோஸ் வாட்டரில் இவ்வளவு அழகு இரகசியங்கள் ஒளிந்துள்ளதா… நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!!!

21 November 2020, 9:24 pm
Quick Share

நம்மை அழகுபடுத்தி கொள்ள பல பொருட்களை நாம்  பயன்படுத்தி வந்தாலும் அதில் ரோஸ் வாட்டருக்கு தனி இடம் உண்டு. குறைவான செலவில் அசத்தலான அழகை பெற ரோஸ் வாட்டர் நமக்கு பெரிதும் உதவும். ரோஸ் வாட்டரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அழகாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் செலவும் ஆக கூடாது என்பவர்களுக்கு ரோஸ் வாட்டர் தான் சிறந்த சாய்ஸ். 

■முகப்பரு உள்ளவர்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கிராம்பு தூள், ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதனை முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமலே போய்விடும். 

■முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை காய விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். 

■நாள் முழுவதும் நீங்கள் போட்ட பயன்படுத்திய மேக்அப்போடு எப்போதும் படுக்கைக்கு செல்லாதீர்கள். தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டிலும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்த பிறகே தூங்க செல்ல வேண்டும். இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

■வெள்ளையாக இருப்பவர்கள் வெயிலில் சென்று வந்தவுடனே சூரிய கதிர்கள் காரணமாக சன்டேன் ஏற்படுவது சகஜம் தான். இதனை எதிர்கொள்ள வெளியில் சென்று வந்த உடனே பச்சை பயறு தூளோடு ரோஸ் வாட்டரை கலந்து ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு கொள்ளுங்கள். இதனை செய்வதன் மூலமாக கருப்பு திட்டுகள் மறைந்து முகம் வெண்மையாகும். 

■ஆண்கள், பெண்கள் என இருபாலரும் வாகனம் ஓட்டி முடித்த பிறகு கண்களில் ஒரு சோர்வு ஏற்படுவதை உணரலாம். இதனை போக்க ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களில் ஒத்தடம் கொடுத்து பத்து நிமிடங்கள் பஞ்சை கண்களிலே வைத்து விடுங்கள். இது கண்களில் உள்ள சோர்வை போக்கி புத்துணர்ச்சி தரும். 

■ஒரு சிலருக்கு தலைமுடி எப்போதும் ரஃப்பாக காணப்படும். அதனை சாப்ஃடாக மாற்ற இரண்டு தேக்கரண்டி கிளிசரினோடு இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து மயிர் கால்களில் நன்றாக தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். இதனை இருபது நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு ஷாம்பூ வாஷ் செய்து கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்து வந்தாலே உங்கள் முடி சூப்பர் சில்கியாக மாறி விடும். இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருமே பின்பற்றலாம்.  

Views: - 18

0

0