உங்கள் முகத்தின் அழகை பாழாக்கும் கரும்புள்ளிகளை இருந்த இடம் தெரியாமல் மறைய வைக்கும் மூன்று பொருட்கள்!!!

16 October 2020, 8:59 pm
Quick Share

முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாக இருப்பது இறந்த செல்களே ஆகும். முகப்பருக்களை காட்டிலும் கரும்புள்ளிகள் மறைய அதிக நாட்கள் எடுக்கும். பல நாட்கள் இவை நம் முகத்தில் தங்கி இருப்பதால் முகத்தின் அழகே கெட்டு விடும். இதனை முகத்தில் இருந்து அகற்ற பல முயற்சிகள் செய்திருப்பீர்கள். இந்த முயற்சியின் விளைவு காரணமாக ஒரு சில நேரங்களில் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கலாம். இதன் காரணமாக தான் முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கரும்புள்ளிகளை நம் கைகளை கொண்டு அகற்றவே கூடாது. 

உடனே பயந்து விடாதீர்கள். இத்தனை பிரச்சினை தரும் கரும்புள்ளியை மறையச் செய்ய ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. இதனை செய்வது நமக்கு மூன்று பொருட்கள் போதும். அதில் முதல் பொருள் பயத்தம் மாவு. நமது சருமத்திற்கு சோப்பு போடுவதை காட்டிலும் பாசிப்பருப்பில் இருந்து கிடைக்கும் பயத்தம் மாவை பயன்படுத்துவது நம்மை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ளும். வயதான அறிகுறிகளை நிறுத்தி வைக்கும் தன்மை பயத்தம் மாவிற்கு உண்டு. 

நமக்கு தேவையான இரண்டாவது பொருள் கல் உப்பு. உப்பு சருமத்திற்கு ஒரு நல்ல ஸ்க்ரப்பாக செயல்படுகிறது. கல் உப்பு சிறிதளவு எடுத்து அதனை தூளாக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். கடைசியாக நமக்கு பால் தேவை. பாலில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் நம் சருமத்திற்கு அதிகப்படியான நன்மைகளை தரக்கூடியது. 

இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி கரும்புள்ளிகளை இருந்த இடமே தெரியாமல் மறைய வைப்பது எப்படி என இனி பார்ப்போம். இந்த பேஸ் மாஸ்க் செய்ய மூன்று தேக்கரண்டி பாலில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனோடு 1/4 கப் பயத்தம் மாவு சேர்த்து ஒரு பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையை கொண்டு வாருங்கள். 

முதலில் முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தயார் செய்து வைத்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். நீங்கள் மசாஜ் செய்யும் போது முகத்தில் உள்ள அழுக்குகள், பூஞ்சைகள் போன்றவை நீங்கும். பேஸ்ட் ஓரளவு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

அடுத்ததாக கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் மட்டும் இந்த பேஸ்டை தடவி காய விடுங்கள். நன்றாக காய்ந்த பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களையும் எக்காரணம் கொண்டும் அப்படியே பயன்படுத்த வேண்டாம். கல் உப்பு நன்றாக தூளாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதே போல பாசிப்பருப்பை நைசாக அரைத்து தான் பயன்படுத்த வேண்டும். இவற்றை அப்படியே பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.