மஞ்சள் கறை இல்லாத பளிச்சென்ற பற்கள் வேண்டுமா… இந்த மூன்று பொருட்கள் போதும்!!!

5 November 2020, 10:31 pm
Quick Share

ஒருவரின் முகத்தை பார்க்கும் போது முதலில் நாம் கவனிப்பது அவரது பற்களை தான். பற்கள் வெளியே தெரியுமாறு சிரிப்பதே தனி அழகு தான். ஆனால் பற்கள் வெண்மையாக இல்லாவிட்டால் சிரிப்பதற்கு கூட நமக்கு சங்கடமாக இருக்கும். பற்களில் மஞ்சள் நிறமாக இருப்பது ஒரு பெரும் பிரச்சினை. மஞ்சள் கறை, டீ கறை, வெற்றிலை பாக்கு கறை என எந்தவித கறையாக இருந்தாலும் சுலபமான முறையில் அதனை அகற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

பற்களில் உள்ள கறைகளை அகற்ற, வாய் துர்நாற்றம் நீங்க மற்றும் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கொல்ல என இந்த மூன்று பிரச்சினைகளுக்குமே ஒரே தீர்வு உள்ளது என சொன்னால் நம்புவீர்களா…? அட ஆமாம்ங்க…இந்த மூன்று பிரச்சினையையும் நம் சமையல் அறையில் இருக்கும் மூன்று பொருட்கள் போதும். 

இதனை நாம் செய்வதற்கு மஞ்சள் தூள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா ஆகிய மூன்று பொருட்கள் தேவை. வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதில் மஞ்சள் தூள் வல்லமை பெற்றது. உப்பானது பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க உதவியாக இருக்கும். மேலும் வாயில் இருந்து வருகின்ற கெட்ட வாடையை போக்கும் தன்மை பேக்கிங் சோடாவிற்கு உண்டு. 

ஒரு சிறிய பவுலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இப்போது பல் துலக்கும் பிரஷ்ஷில் நாம் தயார் செய்து வைத்த தூளை தொட்டு நீங்கள் வழக்கமாக பல் துலக்குவது போல பற்களை நன்றாக துலக்குங்கள். 

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பற்களை தேய்க்கும் போது உப்பு ஈறுகளில் படாதவாறு பார்த்து கொள்ளுங்கள். பிரஷ் வைத்து தேய்க்க ஒத்து வராவிட்டால் கைகளாலும் தொட்டு தேய்க்கலாம். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். 

மேலும் வாய் துர்நாற்றம் நீங்க அடிக்கடி வாயில் ஓரிரு புதினா தழைகளை போட்டு மென்று வாருங்கள். அவ்வப்போது வாயை வெந்நீரில் கொப்பளியுங்கள். இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்பட காரணமாக இருக்கும் கெட்ட கிருமிகள் அழிந்து விடும். அதே போல மேலே கூறிய குறிப்பை ஒரு முறை மட்டும் செய்த பிறகு விட்டு விட வேண்டாம். தொடர்ந்து மூன்று முறையாவது இதனை செய்து வாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

Views: - 30

0

0