ஏறுமுகமாக வாரத்தை தொடங்கிய பங்குச்சந்தைகள்… சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 1:45 pm

வாரத்தின்‌ தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள்‌ ஏற்றத்துடன்‌ தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 66,061.89 என்ற புள்ளிகளுடன்‌ தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆன சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 278 புள்ளிகள் அதிகரித்து 66,339 புள்ளிகளாக உள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்‌ நிஃப்டி 80 புள்ளிகள்‌ உயர்ந்து 19,645 புள்ளிகளில்‌ வர்த்தகமாகி வருகிறது.

Wipro, Dr Reddys Labs, Reliance, Adani Enterpris, SBI உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ ஏற்றம்‌ கண்டு வருகின்றன. Hero Motocorp, ONGC, Bharati Airtel, SBI Life Insura, Tata Motors உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, பிரபல கட்டுமான நிறுவனமான CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம் 9.35 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.46 புள்ளிகள் உயர்ந்து 9.81 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!