ஐப்பசியில் சுபநிகழ்ச்சி வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. வெள்ளி விலை அதிரடி குறைவு!

Author: Hariharasudhan
25 October 2024, 10:30 am

சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் உயர்ந்த புவிசார் அரசியல் பதற்றம், ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், நேற்று அதிரடியாக தங்கம் விலை சரிவைக் கண்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று (அக்.24) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 3 ரூபாய் குறைந்து 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : விஜய் அரசியலில் தலை தீபாவளியா? பட்டாசு வெடிக்குமா? நமத்துப் போகுமா?

இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் இம்மாதம் திருமணம் முதல் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் வைத்திருப்பவர்கள் வெள்ளிப் பொருட்கள் வாங்க இந்த நாள் பொருளாதார ரீதியாக சரியாக இருக்கும்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?