அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஐப்பசி முகூர்த்த கணக்கை முடிச்சுவிடுங்க..!

Author: Hariharasudhan
2 November 2024, 10:25 am

சென்னையில் ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டது. இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான நேற்று தங்கம் விலை சரிவைச் சந்தித்தது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

மேலும், சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

SILVER BUISCUIT

இதன்படி, இன்று (நவ.2) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ‘சித்தா’ பட பாணியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. உடலை புதைத்த கொடூரம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 875 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?