இனி நினைச்சாலும் வாங்க முடியாது போல : விண்ணை பிளக்கும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 10:27 am

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும். பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.

இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.40,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,200 உயர்ந்து ரூ.74,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…