மகனால் காற்றில் பறக்கும் மானம்… ஓவர் வாய்க்கொழுப்பு : கொதிக்கும் கோலிவுட்!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2024, 7:05 pm
மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அந்த நடிகர் நாயகன், வில்லன் என கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.
தற்போது பிரபல நிகழ்ச்சி ஒன்றுக்கு தொப்பாளராக வலம் வரும் அவருக்கு ரூ.17 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உங்க மகனுக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்திதான்
நல்ல திறமையான நடிகரான இவர் நடித்த சில படங்களில் அவரது மகனும் தலைகாட்டியுள்ளார். தற்போது சண்டை பயிற்சியாளர் ஒருவரின் இயக்கத்தில் அவரது மகன் ஹீரோவாக களமிறங்குகிறார்.
அந்த படத்துக்கு பூஜை போட்டது முதல் அந்த நடிகரின் மகனுக்கு ராகு காலம் ஆரம்பித்தது. அவர் பேசிய திமிர் பேச்சு அந்த நடிகரின் ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது.
நெட்டிசன்கள் அவரை ட்ரோல் மெட்டீரியலாக பார்த்து வருகின்றனர். அதாவது தனது அப்பாவின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என கூறிய மகன், ஆடியோ வெளியீட்டு விழாவில் அழைத்து வந்தது ஏன் எனற் கேள்வி முன் வைத்த போது, தந்தையர் தினம் என கூறி சமாளித்தார்.
தினமும் தந்தை செலவுக்கு பணம் குறைவாகத்தான் கொடுப்பார் என அவர் கூறியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. பையனுக்கு ஓவர் வாய்க் கொழுப்பு, பொதுமேடையில் பேசும் போது பார்த்து பேச வேண்டும் என வரிசை கட்டி அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.