அவருக்கு இதெல்லாம் பழக்கம் ஆகிருச்சு; எனக்கு இல்லை; எமோஷனல் ஆன சூப்பர் ஸ்டார்,..
Author: Sudha20 July 2024, 2:03 pm
இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்து பேன் இந்தியா திரைப்படமாக வெளியான படம் கல்கி 2898 AD இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கல்கி 2898 AD திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இந்த படத்தின் வசூல் குறித்து பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இது போன்ற ஒரு பெரிய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நான் இந்தப் படத்தை 4 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் எனக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. நமது கலாசாரம் மற்றும் புராணக்கதைகள் குறித்த கல்வியாக இந்தப் படத்தைக் கருதுகிறேன்” என்று சொன்னார்.
மேலும் பிரபாஸுக்கு வேண்டுமானால் 1000 கோடி ரூபாய் வழக்கமானதாக இருக்கலாம். ஏனென்றால் அவருடைய பாகுபலி திரைப்படம் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டது . ஆனால் எனக்கு இது பெரிய விஷயம் என்று எமோஷனல் ஆக பேசியுள்ளார்..
0
0