“எதாவது சொல்றதுக்குள்ள டெலிட் பண்ணிடுங்க ” – பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தினால் காண்டாண ரசிகர்கள் !

15 August 2020, 9:52 am
Quick Share

நஸ்ரியா Look Alike என்கிற பெயரோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அறிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.

பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பிகில் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் விஜய் பிகில் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார். தற்போது பிகில் மோதிரத்தை காட்டியபடி போட்டோ போட்டு ஒரு வருடம் ஆகுது நண்பர்களே என பதிவிட்டுள்ளார் வர்ஷா பொல்லம்மா.

ஆனால், விஜய் ரசிகர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடுமையான சோகத்தில் விஜய் ரசிகர்கள், இருக்கும் இந்த நிலையில், பிகில் மோதிரத்தை வைத்து ஒரு வருஷம் ஆச்சு என்று வர்ஷா கொண்டாட்ட மனநிலையில் இருப்பதை கண்ட விஜய் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். “ஏதாவது சொல்றதுக்குள்ள ட்வீட்டை டெலிட் பண்ணிடுங்க” என்று கோபமாக ரிப்ளை செய்துள்ளார் ஒரு விஜய் ரசிகர்.

Views: - 9

0

0