“என்னுடைய Pant-ஐ தான் பாத்துட்டு இருந்தீங்களா..?” – ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த நெத்தியடி பதில்..!

23 June 2021, 1:10 pm
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி ஷங்கர், ஒரு குழந்தை மருத்துவ செலவுக்காக ஒரு வீடியோவை அப்லோட் செய்து ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் தன்னுடைய உண்டியல் சேமிப்பை கொடுக்க தயாராக உள்ளதாக கூறி, பிரியா பவானி ஷங்கரின் அன்பை பெற்றார்.

அப்போது சக நெட்டிசன் ஒருவர், ப்ரியா பவானி ஷங்கர் அணிந்திருந்த லுங்கியை கமென்ட் அடிக்க, கடுப்பான ப்ரியா பவானி ஷங்கர்.. இதே கமெண்ட்-ஐ சாதாரண போஸ்ட்-ல போட்டிருந்தா உங்களை விட அதிக ஹ்யூமர் சென்சுடன் இந்த கமெண்ட்டை நான் அணுகியிருப்பேன். ஆனால், நான் ஒரு குழந்தையின் மருத்துவ உதவி கேட்டு பேசிக்கொண்டிருக்கும் போது கூட என்னுடைய பேண்ட்-ஐ தான் பாத்துட்டு இருந்தீங்களா..? என கேள்வி எழுப்பி இப்படி ஒன்னு.. இப்படியும் ஒன்னு என்று கோபமாக அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Views: - 517

14

7