நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

20 January 2021, 8:04 pm
Quick Share

கேரளாவை பூர்வீகமாக கொண்ட உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, 1996 ஆம் ஆண்டில் ‘தேசதனம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தில் கமலஹாசனுக்கு தாத்தாவாக நடித்தவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவர் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’, அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தின் மூலம் அனைவராலும் தமிழில் நன்கு அடையாளம் காணப்பட்டார். இவர் கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்திலுள்ள பய்யனூரில் காலமானார். இவருக்கு வயது 97.

இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவருடைய ஒரு மகன் கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். இவரது ஒரு பேரன் தீபன்குரான் இசையமைப்பாளராக உள்ளார். இவரது மூத்த மகள் பிரபல மலையாள இயக்குநர் கைதாப்ரம் தாமோதரன் நம்பூதிரியை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0