சீனா சென்ற தென்னிந்திய குடும்பப் படம்; அங்கேயும் வரவேற்பா? ஹாப்பி ஆன படக்குழு,…

Author: Sudha
6 July 2024, 1:08 pm

நிறைய சீன மொழித் திரைப்படங்களை நாம் தமிழில் டப்பிங் செய்து பார்த்திருக்கிறோம்.சில தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து வெளிநாட்டினரும் வியந்து தங்கள் மொழியில் அதை படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அப்படி 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படம் திருஷ்யம்.ஜீத்து ஜோசப் எழுதி இயக்கினார்.மோகன்லால், மீனா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் மகன் காணாமல் போகிறான்.கதாநாயகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் வருகிறது.இதனால் அவர்கள் எதிர் கொள்ளும் போராட்டத்தைப் பற்றி படம் பேசுகிறது.தமிழில் பாபநாசம் என கமல் நடிப்பில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு ஹிட் ஆனது.

சிங்களம் போன்ற 3 வெளிநாட்டு மொழிகளில் ‘தர்மயுத்யாயா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். சீனாவிலும் இந்த திரைப்படம் ஷீப் வித் அவுட் ஏ ஷெஃபர்ட் அதாவது ‘மேய்ப்பன் இல்லாத ஆடுகள் என்னும் பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இப்படம் இந்தோனேசிய “பாசா” மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.நம் தென்னிந்திய திரைப்படங்கள் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருவது திரைத் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!