ரீ- என்ட்ரி கொடுப்பாரா ஏ.ஆர். முருகதாஸ்..! பிரம்மாண்ட தயாரிப்பில் நடிக்க இருக்கும் பிரபல நடிகர்.?

Author: Rajesh
1 April 2022, 1:04 pm

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை. தர்பார் படம் தோல்வியை தழுவியதாகவே சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தோல்விக்கு பின்னர் ஒரு படத்தினை ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ் இந்த நிலையில், தமிழில் மீண்டும் வேற லெவல் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் முருகதாஸ்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரமும் தொடர்ந்து அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகின்றது. இதனால் அவரும் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தினை தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.
இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்து வந்த இயக்குனர் முருகதாஸ், மீண்டும் இப்படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!