துபாயில் நடைபெறும் 12 வது சைமா; 11 விருதுகளுக்கு மோதும் ரஜினியின் ஜெயிலர்

Author: Sudha
17 July 2024, 2:43 pm

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (சைமா) வரும் செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது.இது 12 வது விருது வழங்கும் விழா.

ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த படங்களும், கலைஞர்களும் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த வருடம் நடைபெறும் விழாவில் பங்குபெறும் நட்சத்திரங்கள் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 11 விருதுகளுக்கும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் 9 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் பிரிவில் ரஜினிகாந்த் (ஜெயிலர்), விஜய் (லியோ), விக்ரம் (பொன்னியின்செல்வன் 2), சிவகார்த்திகேயன் (மாவீரன்), உதயநிதி ஸ்டாலின் (மாமன்னன்), சித்தார்த் (சித்தா).

சிறந்த நடிகைக்கான பிரிவில் திரிஷா (லியோ), நயன்தாரா (அன்னபூரணி), ஐஸ்வர்யாராய் (பொன்னியின்செல்வன் 2), கீர்த்திசுரேஷ் (மாமன்னன்), மீதா ரகுநாத் (குட்நைட்), ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா).

சிறந்த இயக்குனர் பிரிவில் நெல்சன் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (லியோ), மணிரத்னம் (பொன்னியின்செல்வன் 2), வெற்றிமாறன் (விடுதலை), அருண் குமார் (சித்தா), மாரி செல்வராஜ் (மாமன்னன்)

சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இளையராஜா (விடுதலை), ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின்செல்வன் 2), அனிருத் (ஜெயிலர், லியோ), சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா), நிவாஸ் கே.பிரசன்னா (டக்கர்)

சிறந்த படம் பிரிவில் ஜெயிலர், மாமன்னன், லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலை.

இன்னும் பல பிரிவுகளில் ஜெயிலர் மற்றும் மாமன்னன் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 169

    0

    0