பாலியல் புகார் அளித்த மேலும் 2 பெண்கள்? ராப் பாடகர் வேடன் மீது அதிகரித்து வரும் கிரைம் ரேட்…
Author: Prasad18 August 2025, 3:43 pm
புரட்சி பாடகர்
கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடன், சமீப காலமாக மிகவும் பிரபலமாக வலம் வருகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளை மையப்படுத்தியும் சமூகத்தில் நடக்கும் இழிவுகளை மையப்படுத்தியும் இவரது பாடல்கள் அமைவது வழக்கம். இதனால் பல சர்ச்சைகள் எழுவதும் வழக்கம்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் கஞ்சா பயன்படுத்தியதாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. அதனை தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என அப்பெண் குற்றம் சாட்டியிருந்தார். இப்புகாரை தொடர்ந்து பாடகர் வேடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!
இந்த நிலையில் ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். வேடன் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அப்பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
ஒரு பெண், இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி தன்னை கொச்சிக்கு வரவழைத்த வேடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், வேடன் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை அவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக புகார் அளித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
