47 வயதில் குழந்தை பெற்ற 23 வயது நடிகையின் தாய் ; ‘வீட்ல விஷேசம்’ பட பாணியில் நடந்த சுவாரஸ்யம்..!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 6:17 pm

ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம் வீட்ல விசேஷம். ஹிந்தியில் வெளியாகி பிரபலமான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும்.

திருமணமாகும் வயதில் மகன்கள் உள்ள நிலையில், அம்மா ஊர்வசி கர்ப்பமாகிறார். 50 வயதில் கர்ப்பமான விஷயத்தை மகன்களிடம் எப்படி சொல்வது, சமூகம் எப்படி பார்க்கும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன பேசுவார்கள் என ஏகப்பட்ட விஷயங்களை காமெடி மற்றும் கருத்து கலந்து அணுகியுள்ள படம் தான் வீட்ல விசேஷம்.

50 வயதில் ஒரு பெண் கர்ப்பமானால் அவளை கர்ப்பமாக்கிய ஆணை வீரனாகவும், அந்த பெண்ணை கேவலமாகவும் பார்க்கும் சமூகத்தின் எண்ணத்திற்கு எதிரான சவுக்கடி தான் இந்த படம். இந்தப் படத்தின் கதையைப் போலவே பிரபல நடிகையின் வீட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

‘செம்பட்டு’, ‘இளையவாள் காயத்ரி’ ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர் மலையாள சின்னத்திரை நடிகை ஆர்யா பார்வதி (23). இவர் பலரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாகவும், அதிர்ச்சிப்படுத்தும் விதமாகவும், தனது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதன்மூலம் நேர்மறை, எதிர்மறையான விமர்சனங்களை அவர் பெற்றார்.

இந்த நிலையில், ஆர்யா பார்வதியின் தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ஆர்யா பார்வதி மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் என்னை அம்மாவை பத்திரமாக திரும்ப கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என மருத்துவர்களை குறிப்பிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!