ஆமிர்கான் வீட்டுக்கு படையெடுத்த ஐபிஎஸ் அதிகாரிகள்? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
Author: Prasad28 July 2025, 1:39 pm
ஆமிர்கானின் வீட்டிற்கு வந்த ஐபிஎஸ் அதிகாரிகள்?
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆமிர்கான் முன்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து போலீஸ் வாகனங்கள் வெளியேறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் ஆமிர்கானை 25 ஐபிஎஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்து சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஆமிர்கான் சமீபத்தில் “சித்தாரே ஸமீன் பர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சென்சார் போர்ட் பல மாற்றங்களை செய்ய சொல்லி உத்தரவிட்டு இப்படத்திற்கு அனுமதி தந்தது.

திரைப்படத்தை காண வந்தார்களா?
ஆமிர்கான் தான் நடித்து தயாரித்த “சித்தாரே ஸமீன் பர்” திரைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரத்யேகமாக தனது வீட்டில் வைத்து திரையிட்டுக்காட்டியதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏன் ஆமிர்கானை சந்தித்தார்கள்? என்பது குறித்தான அதிகாரபூர்வ தகவல்கள் தெரியவில்லை.
ஆமிர்கான் ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
