தனுஷின் பிடியில் இருந்த பிரபல நடிகைக்கு 2வது திருமணம் : ஒரு வழியா ஒத்துக்கிட்டாங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 6:31 pm
Sonia 2nd Marriage - Updatenews360
Quick Share

இயக்குநருடன் திருமணம் நடந்து விவாகரத்து ஆன நிலையில் 2வது திருமணம் செய்ய பிரபல நடிகை முடிவெடுத்துள்ளார்.

திரையுலகில் Nee Premakai என்ற தெலுங்கு படம் மூலம் நடிக்க தொடங்கிய சோனியா அகர்வால் அடுத்து கன்னடம், தமிழ், மலையாளம் என படங்கள் நடிக்க தொடங்கினார்.

பிரபல இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சோனியா அகர்வால். இவரது நிதானமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டி சென்றார்.

இதையடுத்து சோனியா அகர்வால் மீண்டும் செல்வராகவனின் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

செல்வராகவனுடன் படங்களில் இணைந்திருந்த இவருக்கும் இயக்குனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியாக சில ஆண்டுகள் வந்த இந்த தம்பதிகள் திடீரென பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த சோனியா அகர்வால், சில ஆண்டுகள் கழித்து கிடைத்த சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில், அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ் எஸ் இயக்கத்தில் உருவான கிராண்மா திரைப்படத்தில் நடித்திருந்தார். க்ரைம், த்ரில்லர் திரைப்படமான கிராண்மா திரைப்படத்தில் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியானது.

இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால், மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசு காட்டுத் தீ போவ பரவியது.

இந்த வதந்தி பரவியதற்கு முக்கிய காரணமே எஸ் பி பி சரண், சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

மேலும், அந்த பு கைப்படத்தில் எஸ்பிபி சரண் சூட்கோட்டில் இருக்க, சோனியா அகர்வாலின் தோளில் கை போட்டுக் கொண்டு இருந்தார். அதில், ‘ஒரு புதிய விஷயம் தயாராகிக் கொண்டு இருக்கின்றது’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரணுக்கும் சோனியா அகர்வாலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் தற்போது ஒரு பேட்டியில் சோனியா அகர்வால் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எவ்வளவு நாளைக்கு நான் தனியாக இருக்க முடியும் என தெரியாது, எனக்கு பி டித்தமான நபரை பார்க்கும் போது நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 899

15

19