ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து சிக்கும் 3 எழுத்து நடிகர்.. இவரா அந்த பிரபலம்..?
Author: Udayachandran RadhaKrishnan27 June 2025, 2:41 pm
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது பரபரப்பானது. தொடர்ந்து கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவும் கைதாகியுள்ளது அடுத்தடுத்து கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்களும் சிக்க உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டியலை வைத்துள்ளதாகவும், 3 எழுத்து நடிகர் உள்ளா என கூறப்படுகிறது.
இளம் இசையமைப்பாளர் ஒருவர் போதை இல்லாமல் இசை அமைக்கமாட்டாராம். இப்படி பலரும் பலவிததமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் தேவையா? கமல்ஹாசனுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டா?
இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள பாலாஜி பிரபு, சினிமாவில் உள்ளவர்கள் போதைப் பெருளை பயன்படுத்துவது சாதாரணம் தான். குறிப்பாக மன்சூர் அலிகான் மகன், ஷாருக்கான மகன் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்
ஆனால் மன்சூர் மகன் என்பதால் பெரிய அளவு இந்த விஷயம் பிரபலமாகவில்லை. ஸ்ரீகாந்த் கைது என தகவல் பரவியதால் பரபரப்பானது. அவருக்கு ஏற்பட்ட நஷ்டம், அவமானம், கடன் பிரச்சனை, சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதெல்லாம் ஒரு காரணம் தான். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவர் போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கலாம்.
பொதுவாக சினிமாக்காரர்கள் என்றாலே பொது இடங்களில் தலைகாட்ட முடியாது. அவர்கள் இது போன்ற பப்ப, கிளப்புக்கு சென்று தங்களது நண்பர்களை சந்திப்பர். அப்படி சந்திக்கும் போது போதைப் பொருளை பயன்படுத்துவர். சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பெரும்பாலான பப்புகளில் இப்படித்தான நடக்கிறது.

இந்த விவகாரத்தில் சினிமா பிரபலங்கள் நிறைய உள்ளனர். மூன்றெழுத்து நடிகர் என்று சொன்னால் நிறைய பேர் உள்ளனர். அதனால் குறிப்பிட்டு இவர்தான் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. நள்ளிரவு 1 மணிக்கு மேல் இன்னும் பெரிய பப்பகள், பார்களில் நடிகர்கள் நிலை தடுமாறி வருவதை கண்கூடாக பார்க்கலாம்.
போதைப் பொருள் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளுது. போலீசார் அடுத்தடுத்து யாரை கைது செய்வார்கள், எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்பதை பார்க்கலாம் என கூறினார்.
