75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2025, 11:35 am
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி வருகிறது.
இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் நடிகை ஷோபனா உத்தமன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானார்,
இதையும் படியுங்க: சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!
தற்போது கலைஞர் டிவியில் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் பிரோமோதான் பரபரப்பை கிளப்பியுள்ளது, 75 வயதான எஸ்வி சேகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தாத்தா வயசு ஆண், பேத்தி வயது பெண்ணுக்கு தாலி கட்டும் ப்ரோமோ வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என ஷோபனாவிடம் கேட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய ஷோபான, இது சர்ச்சையான கதைதான், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் என்பதால் ஒத்துக்கொண்டேன். ஒரே விதமான ரோலில் நடிக்க வேண்டிய கட்டயாமில்லை. இதை எப்படியும் நெகட்டிவ்வாக தான் பேச போகிறார்கள் என்பது எனக்கு தெரியும், நடி நடி என்று என்னை சொன்னவர்கள் கூட இப்போது இந்த பிரோமோவை பார்த்து வாயடைத்து நிற்கின்றனர் என கூறினார்.
