‘வாழு & வாழவிடு… நிபந்தனையில்லாத அன்பு எப்போதும்!!’ : 30 ஆண்டுகள் திரைப்பயணம் குறித்து ‘தல’ அஜித் அறிக்கை!!

Author: Babu
5 August 2021, 7:07 pm
Quick Share

அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனமாக அறிமுகமானவர் நடிகர் அஜித். ஆசை, காதல் கோட்டை, ராசி, காதல் மன்னன், வாலி போன்ற படங்களில் காதல் மன்னனாகவே வலம் வந்தார். பின்னர், அமர்க்களம் படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோ என்ற புதிய அவதாரத்தையும் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார். இவர் திரையுலக செயல்பாடுகளை விட, நிஜ உலகில் இவர் செய்யும் செயல்களே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எந்தவித பந்தாவும், அரசியல் தொடர்பில்லாமல் இருப்பதுமே இவர்க்கென்று ஒரு பட்டாளத்தை உருவாக்கவும் காரணமாக அமைந்து விட்டது. இப்படியே சுமார் 30 ஆண்டுகள் ஓடி விட்டன. நடிகர் அஜித் திரையுலகில் கால்பதித்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. இதனை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கிறது ‘வலிமை’ திரைப்படம். மேலும், அஜித் சினிமாவிற்குள் நுழைந்து 30 வருடத்தில் நுழைவதை அடுத்து படத்தின் முதல் பாடலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், 30 ஆண்டுகள் திரையுலக பயணத்தையொட்டி நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “sரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே காசின் 3 பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும் வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். வாழு & வாழவிடு! நிபந்தனையில்லாத அன்பு எப்போதும்!!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 368

8

0