40 வயது நடிகையை 4வது தாரமாக மணந்த 63 வயது நடிகர்.. அந்த விசயத்துக்கு 3-வது மனைவிக்கு தடை போட்ட நீதிமன்றம்..!

Author: Vignesh
4 August 2023, 5:45 pm

சென்னை தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது. நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார்.

இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த போது, 3வது மனைவியான ரம்யா ரகுபதி அங்கு சென்று அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். அப்போது, போலீசார் குறுக்கிட்டு, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

பவித்ரா லோகேஷ் சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ்பெற்றவர். இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு ‘சம்மோகனம்’ படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இருவரும் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டனர்.

நரேஷ், பவித்ரா லோகேஷ் இருவரும் ‘அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி’, ‘மிடில் கிளாஸ் அப்பா’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ராமராவ் ஆன் டூட்டி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பவித்ராவை இந்த ஆண்டு நரேஷ் பாபு 4ஆம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், மூன்றாவது மனைவி ரம்யா அவர்கள் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார். தன் சொந்த வாழ்க்கையை வைத்து மல்லி பெல்லி என்ற பெயரில் படமாக எடுத்துள்ளதாகவும், அப்படத்தில் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் நடித்துள்ளனர்.

naresh pavithra-updatenews360

இந்த நிலையில், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மூன்றாம் மனைவி ரம்யா நீதிமன்றத்தில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக இருதரப்பினரின் விவாதங்களை கேட்ட நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு தணிக்கை குழு கற்பனை கதை என்று சான்றிதழ் அளித்திருப்பதால் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

naresh pavithra-updatenews360

மேலும், மற்றொரு வழக்கில் பல வருடங்களாகப் பிரிந்து வாழும் மூன்றாம் மனைவி நான்காம் மனைவியுடன் குடும்பம் நடத்தும் நரேஷ்ன் வீட்டிற்கு செல்ல பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!