69-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களின் முழு விவரம் இதோ!

Author: Shree
24 August 2023, 10:26 pm

இந்திய நாட்டின் 69-வது தேசிய விருது பெறும் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் நடத்தப்பட்டு அதில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று அறிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் சிறந்த விருதுபெற்ற திரைப்படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சிறந்த படம் – ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்ஸ் (ஹிந்தி)
சிறந்த நடிகர் – அல்லு அர்ஜூன் (புஷ்பா)
சிறந்த நடிகை – ஆலியா பட் (கங்குபாய்), கிர்த்தி சனோன்(மிமி)
ஒட்டுமொத்த சிறந்த பொழுதுபோக்கு படம் – ஆர்ஆர்ஆர் (தெலுங்கு)
சிறந்த தேசிய படம் – தி காஷ்மீர் பைல்ஸ்
சிறந்த சமூக படம் – அனுநாத் – தி ரிசோனன்ஸ் (அசாமி)
சிறந்த இயக்குனர் – நிகில் மகாஜன் (கோதாவரி – தி ஹோலி வாட்டர்)
சிறந்த குணச்சித்ர நடிகை – பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் பைல்ஸ்)
சிறந்த குணச்சித்ர நடிகர் – பங்கஜ் திரிபாதி (மிமி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – பவானி ரபாரி ( லாஸ் பிலிம் ஷோ)
சிறந்த பாடகி – ஸ்ரேயா கோஷல் (மாயவா… – இரவின் நிழல்)
சிறந்த பாடகர் – காலா பைரவா (மொமுரம் பீமுடு – ஆர்ஆர்ஆர்)
சிறந்த அறிமுக இயக்குனர் – விஷ்ணு மோகன்(மெப்பாடியன்)
சிறந்த ஒளிப்பதிவு – ஆவிக் (சர்தார் உதம்)
சிறந்த திரைக்கதை – நயாட்டு (மலையாளம்- ஷாகிர் கபூர்), கங்குபாய் (சஞ்சய் லீலா பன்சாலி)
சிறந்த ஆடை வடிவமைப்பு – வீரா கபூர் (சர்தார் உதம்)
சிறந்த மேக்-அப் – பிரீத்தி ஷீல் சிங் (கங்குபாய்)
சிறந்த சண்டை இயக்குனர் – கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த இசை – தேவிஸ்ரீ பிரசாத்(புஷ்பா), எம்எம் கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த படத்தொகுப்பு – சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய்)
சிறந்த பாடல் ஆசிரியர் – சந்திரபோஸ்
சிறப்பு விருது – ஷெர்ஷா (விஷ்ணுவர்தன்)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – வி ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த நடனம் – பிரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்)

மொழி வாரியாக விருது என்ற படங்கள்:

சிறந்த தமிழ் படம் – கடைசி விவசாயி
சிறந்த தெலுங்கு படம் – உப்பென்னா
சிறந்த கன்னட படம் – 777 சார்லி
சிறந்த மலையாள படம் – ஹோம்
சிறந்த ஹிந்தி படம் சர்தார் உதம்
சிறந்த குஜராத்தி படம் – செலோ ஷோ
சிறந்த மராத்தி படம் – ஏக்தா கே ஜலா
சிறந்த அசாமி படம் – அனுர் (ஐய்ஸ் ஆன் தி சன்சைன்)
சிறந்த பெங்காலி படம் – கல்காக்கோ (ஹவுஸ் ஆப் டைம்)
சிறந்த ஒடியா படம் – பிரதிக்ஷயா

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!