இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?
Author: Prasad10 July 2025, 4:11 pm
காதலே தனிப்பெருந்துணையே
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “96” திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் அதனை தொடர்ந்து “மெய்யழகன்” திரைப்படத்தின் மூலம் நமது மனதை கொள்ளை கொண்டார். இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து “96” பார்ட் 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார் பிரேம் குமார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர், தமிழ் சினிமா விமர்சகர்கள் குறித்து மிகவும் காட்டமான தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

காசு வாங்கிக்கொண்டு ரிவ்யூ செய்கிறார்கள்?
“சமீப காலமாகவே தமிழ் சினிமா எதிர்மறை விமர்சனங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமர்சகர்கள் தனக்கென ஒரு அஜெண்டா வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். அப்படி செய்தால் அடுத்த படத்திற்கான புரொமோஷனுக்கு தயாரிப்பாளர்கள் தன்னிடம் வருவார்கள் என நினைக்கிறார்கள். 90 சதவீததிற்கும் மேற்பட்ட விமர்சகர்கள் காசு வாங்கிக்கொண்டுதான் ரிவ்யூ செய்கிறார்கள்” என அப்பேட்டியில் பிரேம் குமார் பேசியுள்ளார். இவரது இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
