சீயானை வெயிட்டிங்கில் வைத்துவிட்டு மலையாள நடிகருக்கு ஃபோன் செய்த 96 பட இயக்குனர்?  

Author: Prasad
10 September 2025, 1:25 pm

பிரேம் குமார்-சீயான் விக்ரம் படம் டிராப்?

“96”, “மெய்யழகன்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரேம் குமார் அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டன. ஆனால் பிரேம் குமார் கூறிய கதையில் தனக்கான மாஸ் எலமண்ட்டுகள் இல்லை என விக்ரம் கூறியதாக சில தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில்தான் தற்போது இத்திரைப்படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் பிரேம் குமார் அளித்த பேட்டியே.

96 movie director next film with fahadh faasil

அடுத்த படம் இவரோடதான்

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரேம் குமாரிடம் அவரது அடுத்த திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேம் குமார், “நான் அடுத்ததாக ஃபகத் ஃபாசிலை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இது ஒரு திரில்லர் கலந்த ஆக்சன் திரைப்படமாகும். இதில் எனது பாணியிலான எமோஷனலான அம்சங்களும் இருக்கும். ஃபகத் ஃபாசிலிடம் 45 நிமிடங்கள் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. இது ஒரு நேரடி தமிழ் படம் ஆகும்.  அடுத்த ஆண்டு ஜனவரியில் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது” என கூறினார். 

96 movie director next film with fahadh faasil

இதன் மூலம் சீயான் விக்ரமை வைத்து இயக்கும் திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவர தொடங்கிவிட்டன. எனினும் இப்பேட்டியில் அடுத்து பேசிய பிரேம் குமார், “விக்ரம் படத்திற்கான கதையை இனிமேல்தான் எழுத வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!