தங்கமே தங்கமே எம்புட தங்கமே – குட்டி ஜானு வெளியிட்ட புகைப்படத்தால் அவரை துரத்திக் கொண்டிருக்கும் இளசுகள்

12 January 2021, 6:57 pm
Quick Share

விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடித்த 96 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு காரணம் படத்தின் clichè எதுவும் இல்லாமல் கதை மென்மையாக நகர்ந்தது தான். காதல் காட்சிகளை மிக அழகாக இயல்பாக எடுத்திருப்பார்கள்.

அந்தப் படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் கௌரி கிஷான். குட்டி ஜானு வாக ரெட்டை ஜடை போட்டுகொண்டு இவர் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். நமக்கு ஒரு ஜானு இல்லையே என அனைவரும் ஏங்கும் வண்ணம் தத்ரூபமாக நடித்து இருந்தார்.

மேலும் மலையாளத்தில் சன்னி வெயினோடு ஒரு படத்தில் நடித்து வரும் குட்டி ஜானு, மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் குஷி மோடில் இருக்கும் அவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் தங்கமே தங்கமே எம்புட தங்கமே என பாடிக்கொண்டு மீண்டும் அவளை காதலிக்க தொடங்கி விட்டார்கள் இளசுகள்.

Views: - 7

0

0