செம்ம கும்மு, நம்ம குட்டி ஜானு – இறுக்கமான ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம்

8 January 2021, 12:31 am
Quick Share

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல காதல் கதை வந்ததை கொண்டாடித் தீர்த்தார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள். அது விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் உருவான 96 திரைப்படம். இந்தத் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆனது. நெருக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக இருந்தது.

ராம் – ஜானு என்ற கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். அவர்களது பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், திரிஷாவின் கதாபாத்திரத்தில் கௌரி கிஷனும் நடித்திருந்தார்கள். நமக்கு ஜானு மாதிரி ஒரு தோழி இல்லையென கௌரி கிஷன் மேல் crush வளர்ந்த அளவு தமிழ்நாட்டு இளைஞர்கள் சுத்தி கொண்டிருந்தார்கள். அழகாக கொழுக் மொழுக் என இருந்த கௌரி கிஷன் மேல் பார்வை விழத்தொடங்கியது.

அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கப் போகிறார் என வெயிட்டிங்கில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகியிருக்கும் கௌரி கிஷன், சன்னி வெயினோடு அனுகிரஹித்தன் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கௌரி கிஷன், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஜீன்ஸ் பேண்ட்டை இறுக்கமாக போட்டு போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “என்னா கும்மு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 37

0

0