50 வயது கவர்ச்சி நடிகையை கர்ப்பமாக்கிய 37 வயது நடிகர்? தீயாய் பரவும் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 2:03 pm
Malaika Arora - Updatenews360
Quick Share

50 வயது கவர்ச்சி நடிகை 37 வயது இளம் நடிகருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் நிலையில் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா.

தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது.

அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வந்தனர். இதையடுத்து கடுப்பான மலைக்கா அரோரா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார்.

அர்ஜுன் கபூரும் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அது ஓரு ‘போலி கிசுகிசு’ என கூறி இருந்தார். அர்ஜூன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மக்களை ஏமாற்றிவிட்டு தப்பிக்க முடியாது.

கர்மா இறுதியில் எல்லோரையும் பின்தொடர்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களை ஏமாற்றி விட்டு அதில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. சுற்றி நடப்பதே சுற்றி வருகிறது. அது எப்படி வேலை செய்கிறது. விரைவில் அல்லது பின்னர், பிரபஞ்சம் உங்களுக்குத் தகுதியான பழிவாங்கலைச் செய்யும் என கூறி உள்ளார்.

Views: - 178

0

0